ஐ.நா.சபையை தவறாக பயன்படுத்தும் பாகிஸ்தான்: இந்தியா கடும் தாக்கு

இது பாரபட்சமான மற்றும் பொய்யான கருத்துக்களைப் பரப்புவதற்கான மன்றம் அல்ல.
parvathaneni
Published on

ஐ.நா. பாதுகாப்பு சபையின் ஆண்டு அறிக்கை மீதான பொதுச்சபையின் விவாதத்தின்போது பேசிய பாகிஸ்தானின் நிரந்தரப் பிரதிநிதி ஆசிம் இப்திகார் அகமது காஷ்மீர் விவகாரத்தை எழுப்பினார்.

இப்பிரச்சினை பாதுகாப்பு சபையின் தீர்மானங்களின்படி தீர்க்கப்பட வேண்டும் என்று கூறினார். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.

இதுதொடர்பாக ஐ.நா. சபையில் இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் பேசியதாவது:

ஐ.நா.பாதுகாப்பு சபையின் உறுப்பினராக இருப்பது ஒரு மிகப்பெரிய பொறுப்பு என்பதை பாகிஸ்தானுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

இது பாரபட்சமான மற்றும் பொய்யான கருத்துக்களைப் பரப்புவதற்கான மன்றம் அல்ல.

பாகிஸ்தான் தனது அரசியல் நோக்கங்களை முன்னெடுக்க ஐ.நா. தளங்களை மீண்டும் மீண்டும் தவறாகப் பயன்படுத்துகிறது.

இந்தியா தனது உள்நாட்டு விவகாரமாகக் கருதும் விஷயங்களில் தவறான கருத்துக்களை பாகிஸ்தான் பரப்புகிறது.

ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்கமுடியாத பகுதியாகவே இருந்தது, இருக்கிறது, இனியும் எப்போதும் இருக்கும். இதற்கு முரணான எந்தவொரு கூற்றும் ஆதாரமற்றது. வரலாற்று உண்மைகளுக்கு முரணானது.

பாகிஸ்தானின் வெற்றுப் பேச்சுகளும் ஆதாரமற்ற கூற்றுகளும் இந்த அடிப் படை யதார்த்தத்தை மாற்றப் போவதில்லை என தெரிவித்தார். மேலும், ஐ.நா.பாதுகாப்பு சபையில் சீர்திருத்தங்களை செய்யவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com