பிரபல சினிமா தயாரிப்பாளர் மனைவியுடன் படுகொலை

பெற்றோர் கழுத்தில் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பிரபல சினிமா தயாரிப்பாளர் மனைவியுடன் படுகொலை
Published on

டெஹ்ரான்:

ஈரானில் பிரபல சினிமா தயாரிப்பாளராக இருந்தவர் தரியூர் மெஹர்ஜூய் (வயது 83). இவரது மனைவி வஹிதே முகமதிபர். இவர்கள் இருவரும் தெக்ரான் அருகே உள்ள கராஜில் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் தரியூர் மெஹர் ஜூய் தனது மகள் மோனாவை இரவு உணவுக்காக வீட்டுக்கு வருமாறு செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பினார்.

இதையடுத்து சுமார் 1 மணி நேரம் கழித்து மோனா வீட்டுக்கு வந்தார். அப்போது பெற்றோர் கழுத்தில் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி அவர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினார்கள். சந்தேகத்தின் பேரில் 4 பேரை போலீசார் பிடித்தனர். இதில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com