கணவர் கத்தியால் குத்தப்பட்டதை அறிந்து நிலைகுலைந்தேன்..! இந்திய விமானியின் மனைவி பேட்டி

இந்திய விமானி ஸ்மித் மச்சார், அபு தாபியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Smith machar- Sonal machar
Published on: 

பிளைதுபாய் விமானத்தில் துணை விமானியால் கத்தியால் குத்தப்பட்ட இந்திய விமானி ஸ்மித் மச்சார், அபு தாபியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது மனைவி சோனல் மச்சார், மும்பையில் இருந்து அங்கு சென்று கணவரை பார்த்தார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்தபோது எப்படி இருந்தது என அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் கூறியதாவது:

நான் மிகவும் நிலைகுலைந்து போனேன். எப்படி எதிர்வினையாற்றுவது என்பதை அறியும் மனநிலை எனக்கு இருக்கவில்லை. ஆனால், என் நண்பர்களும் குடும்பத்தினரும் என்னைச்சுற்றி இருந்ததால், எல்லாம் சரியாகிவிடும் என்று எனக்கு நம்பிக்கை அளித்தனர். மிக விரைவிலேயே, அவரது உடல்நிலை சீராக இருப்பதாக எனக்கு செய்திகளும் வரத்தொடங்கின.

நான் நேற்று (நேற்று முன்தினம்) அவரை சந்தித்தேன். அவர் சரியான கவனிப்பில், அதாவது அமீரக டாக்டர்கள் மற்றும் ராணுவ மருத்துவர்களின் சிறந்த பராமரிப்பில் இருக்கிறார் என்ற நம்பிக்கையை அது எனக்கு அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com