வீடு புகுந்து மர்ம நபர் தாக்குதல் - நான்சி பெலோசி கணவர் மருத்துவமனையில் அனுமதி

அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகராக பதவி வகிப்பவர் நான்சி பெலோசி. இவரது கணவர் பால் பெலோசியை மர்ம நபர் தாக்கியதில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நான்சி பெலோசி
நான்சி பெலோசி
Published on

வாஷிங்டன்:

அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகராக இருந்து வருபவர் நான்சி பெலோசி. இவர் தனது குடும்பத்தினருடன் சான் பிரான்சிஸ்கோவில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், நான்சி பெலோசி வீட்டுக்குள் மர்ம நபர் ஒருவர் புகுந்துள்ளார். அந்த நபர் வீட்டில் இருந்த நான்சியின் கணவர் பால் பெலோசியை கடுமையாக தாக்கினார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மர்ம நபரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com