

மறைந்த குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்சே கிரஹாம், தங்களுக்குப் பாலியல் உறவுக்காகப் பணம் கொடுத்ததாக மூன்று ஆண் பாலியல் தொழிலாளர்கள் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுகளுடன் முன்வந்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நெருங்கிய கூட்டாளியான கிரஹாம், இந்தியா ரஷ்ய எண்ணெயை கொள்முதல் செய்வதைக் கடுமையாக விமர்சித்தவராகவும் இருந்தார். கிரஹாம் கடந்த ஜூலை மாதம் தனது 71வது வயதில் காலமானார்.
'தி யங் டர்க்ஸ்' வெளியிட்ட 'தி க்ளோசெடோக்ரசி' என்ற 33 நிமிட ஆவணப்படத்தில் கிரஹாம் தங்களுக்குப் பாலியல் உறவுக்காகப் பணம் கொடுத்ததாகக் குற்றம் சாட்டும் மூன்று ஆண்களின் நேரடி வாக்குமூலங்கள் இடம்பெற்றுள்ளது.
இந்தப் படம் "கிரஹாமின் தனிப்பட்ட வாழ்வுக்கும், LGBTQ+ உரிமைகளுக்கு எதிரான அவரது நீண்டகால அரசியல் நிலைப்பாட்டிற்கும் இடையிலான முரண்பாட்டை ஆராய்கிறது." என படக்குழு தெரிவித்துள்ளது.
"என் பெயர் கெல்வின், எனக்கு 17 வயதாக இருந்தபோது லிண்ட்சே கிரஹாம் உடன் உடலுறவு கொண்டேன்," என்று அந்த மூன்று ஆண்களில் ஒருவரான கெல்வின் கூறியுள்ளார்.
தனது குடும்பம் மிகவும் ஏழ்மையில் இருந்ததால், தனக்கு ஆடைகள் வாங்கக்கூட வசதியில்லை என்றும், அதனால் குறுகிய காலத்திற்கு விலை ஆணாக வேலையை செய்ததாகவும் கெல்வின் மேலும் கூறுகிறார்.
அவர் கூற்றுப்படி, கிரஹாம் ஒரு எஸ்கார்ட் இணையதளம் மூலம் அவரைத் தொடர்பு கொண்டுள்ளார்.
அப்போது தென் கரோலினாவின் செனட்டராக இருந்த கிரஹாம் விருந்தினராகத் தங்கியிருந்த, அரிசோனாவில் உள்ள அப்போதைய அமெரிக்க செனட்டர் ஜான் மெக்கெய்னின் பண்ணைக்கு தான் அழைக்கப்பட்டதை கெல்வின் நினைவு கூர்ந்தார்.
கோரி என்ற மற்றொரு நபரும், கிரஹாம் உடன் இரவு தங்குவதற்காக, தன்னை ஒரு கருப்பு நிற எஸ்யூவி காரில் ஏற்றி, வாஷிங்டன் டி.சி.யில் உள்ள ஒரு ஆடம்பர ஓட்டலுக்கு கொண்டு சென்றதாக தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் அந்த நபர் யார் என்று தனக்குத் தெரியவில்லை என்றும் சில மாதங்களுக்குப் பிறகு, தொலைக்காட்சியில் காட்டப்பட்டபோதுதான் அது “லிண்ட்சே கிரஹாம்” என்றும் அவர் யார் என்பதையும் தான் உணர்ந்துகொண்டதாக கோரி கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகள் ரஷியாவின் போர் முயற்சிகளுக்கு நிதியளிப்பதாக குற்றம் சாட்டி, அந்நாடுகள் மீது கடுமையான வரிகளையும் தடைகளையும் விதிக்குமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கிரஹாம் தொடர்பு வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் இந்தியா உட்பட பல நாடுகளுக்கு வரி விதிக்கும் சட்டத்திற்கு லிண்ட்சே கிரஹாம் மசோதா என்றே பெயர் வைக்கப்பட்டது.