

தன் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற ராப் பாடகி நிக்கி மினாஜ் குறித்து டிரம்பின் பேச்சு கவனம் பெற்று வருகிறது.
அமெரிக்காவில் வரும் நவம்பர் 3 ஆம் தேதி இடைக்கால தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரத்தில் டிரம்ப் ஈடுபட்டுள்ளார். அவரின் குடியரசு கட்சிக்கும் ஜனநாயக கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
டிரம்ப், ஈரான் மீது தொடுத்துள்ள போர், அமெரிக்காவில் விலை வாசி உயர்வு, கட்டுப்பாடுகள் ஆகியவை இந்த தேர்தலில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்த சூழலில் அமெரிக்காவின் மிச்சிகனில் நேற்று நடந்த தேர்தல் பிரசாரத்தில் டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு ஆதரவாக பிரபல ராப் பாடகி நிக்கி மினாஜ் பங்கேற்று பேசினார். இதன்போது டிரம்ப்பும் உடன் இருந்தார்.
பாடகி நிக்கி மினாஜ் குறித்து மேடையில் பேசிய டிரம்ப், அவரின் பின்புறம் குறித்து வர்ணித்தது ஆபாசமாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டிரம்ப் பேசியதாவது, “I looked at one hell of a beautiful ass before, Nicki Minaj. That's hard to miss. Stand up” என்று நிக்கியை அவரை எழுந்து டிரம்ப் நிற்கும்படி டிரம்ப் கூறினார்.
இந்தக் கருத்தை ரசித்து அங்கு கூடியிருந்த குடியரசு கட்சி ஆதரவாளர்கள் ஆர்ப்பரித்தனர். பின்னர் டிரம்ப், தான் பேச்சிலிருந்து விலகியதை ஒப்புக்கொண்டு, “சரி, நான் நம் விஷயத்திற்குத் திரும்புகிறேன்... மன்னிக்கவும்,” என்றார்.
மேலும் அவர், “நிக்கி இதனால் புண்பட்டிருக்க மாட்டார் என்று நம்புகிறேன். நாங்கள் நிக்கியை நேசிக்கிறோம். அவர் நீண்ட காலமாக எங்களுடன் இருக்கிறார்” என்றும் கூறினார்.
டிரம்பின் முக்கிய பிரபல ஆதரவாளர்களில் ஒருவராக உருவெடுத்துள்ள மினாஜ், அமெரிக்க அதிபருடன் அந்தப் பேரணியில் கலந்துகொண்டார். இருவரும் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் போர்ட் ஹூரோனுக்குப் பயணம் செய்திருந்தனர்.
முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில், தான் டிரம்ப்பின் முதன்மையான ரசிகை என நிக்கி மினாஜ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பேரணியைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு இயக்குனர் ஸ்டீவன் செங், ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் இருந்து டிரம்பின் வெளியுறவுக் கொள்கையை மினாஜ் பாராட்டும் காணொளியை பகிர்ந்ததோடு, அவர் அடுத்த வெள்ளை மாளிகை பத்திரிகைச் செயலாளராக ஆகலாம் என்றும் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.