50 வருடங்களுக்கு முன் பெற்ற மாற்று கிட்னி - 108 வயதிலும் ஆரோக்கியம்

சூ வெஸ்ட்ஹெட்டிற்கு தற்போது 108 வயது ஆகிறது5 வருடங்கள் கூட தான் உயிருடன் இருப்போம் என சூ நம்பவில்லை
50 வருடங்களுக்கு முன் பெற்ற மாற்று கிட்னி - 108 வயதிலும் ஆரோக்கியம்
Published on: 

வடகிழக்கு இங்கிலாந்தில் உள்ள நகரம் ஹவுட்டன் லெ ஸ்ப்ரிங் (Houghton-le-Spring).

ஹவுட்டனில் வசித்து வருபவர் சூ வெஸ்ட்ஹெட் (Sue Westhead). வெஸ்ட்ஹெட்டிற்கு தற்போது 108 வயது ஆகிறது

தனது 12-ஆவது வயதில் உடல்நலம் சரியில்லாமல் அவதிப்பட்ட வெஸ்ட்ஹெட்டிற்கு சிறுநீரக நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, 25-ஆவது வயதில் டயாலிசிஸ் செய்து கொள்ள தொடங்கினார்.

நீண்ட சிகிச்சைக்கு பிறகும் அவருக்கு நோய் தீரவில்லை.

1970களின் தொடக்கத்தில் வெஸ்ட்ஹெட்டிற்கு சிறுநீரகத்துறை சிகிச்சை நிபுணர்கள் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்தனர்.

1973ல் வெஸ்ட்ஹெட்டின் தாயார் ஆன் மெட்கால்ஃப் (Ann Metcalf) சிறுநீரகம் தர முன்வந்ததையடுத்து முறையான பரிசோதனைக்கு பின்னர் அறுவை சிகிச்சை நடந்து தாயாரின் சிறுநீரகம், வெஸ்ட்ஹெட்டிற்கு பொருத்தப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை ராயல் விக்டோரியா மருத்துவமனையில் நடந்தது.

அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தாலும், அடுத்த 5 வருடங்களுக்கு கூட தான் உயிருடன் இருக்க முடியும் என வெஸ்ட்ஹெட் அப்போது நம்பவில்லை.

ஆனால், 50 வருடங்கள் கடந்தும், எந்தவிதமான சிறுநீரக சிக்கலும் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறார், வெஸ்ட்ஹெட்.

இந்த நிகழ்வு, தற்போது வெஸ்ட்ஹெட்டிற்கு உடல்நல மேற்பார்வையும் ஆலோசனையும் வழங்கி வரும் சண்டர்லேண்ட் ராயல் மருத்துவமனையில் கொண்டாடப்பட்டது.

மிகவும் மகிழ்ச்சியுடன் அங்கு வந்திருந்த வெஸ்ட்ஹெட்டுடன் உரையாடிய அங்குள்ள மருத்துவர்களும், செவிலியர்களும், மருத்துவமனை பணியாளர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் மக்கள் உறுப்பு தானம் செய்ய முன் வர வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

X