6 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்தில் மீண்டும் குடியேறும் இளவரசர் ஹாரி-மேகன் தம்பதி!

ஹாரி-மேகன் தம்பதி இங்கிலாந்து திரும்பினாலும் அரச குடும்ப பணிகள் ஏற்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளனர்.
Prince Harry - Meghan Markle
Published on

பிரிட்டன் அரச குடும்பத்தின் வாரிசான இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் தம்பதியினர், சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இங்கிலாந்தில் நிரந்திரமாகக் குடியேற முடிவு செய்துள்ளனர்.

இந்த மாத இறுதிக்குள் இவர்கள் அமெரிக்காவிலிருந்து வெளியேறி பிரிட்டன் திரும்புவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அரச குடும்பப் பிரிவு பின்னணி:

பிரிட்டன் மன்னர் சார்லஸின் இளைய மகனான இளவரசர் ஹாரி, பிரபல அமெரிக்க மேகன் இருவரும் காதலித்து கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

எனினும், பிரிட்டன் ஊடகங்களின் அதீத தலையீடு மற்றும் அரச குடும்பத்திற்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, கடந்த 2020 ஆம் ஆண்டு தங்களது அரச பதவிகளையும் பொறுப்புகளையும் துறப்பதாக அதிரடியான முடிவு ஒன்றை அறிவித்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து பிரிட்டனை விட்டு வெளியேறிய அவர்கள், அமெரிக்காவில் குடியேறினர். அமெரிக்காவில் வசித்தபோது, ஓப்ரா வின்ஃப்ரேயுடனான நேர்காணல் மற்றும் ஹாரியின் 'ஸ்பேர்' சுயசரிதை நூல் ஆகியவற்றின் மூலம் தங்களுக்குள் இருந்த குடும்ப முரண்பாடுகளை அவர்கள் வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடரும் சாதாரண குடிமக்கள் அந்தஸ்து

இங்கிலாந்துக்கு மீண்டும் திரும்பினாலும், இளவரசர் ஹாரி மற்றும் மேகன் தம்பதி தங்களது பழைய அரச குடும்பப் பணிகளையோ அல்லது அதிகாரபூர்வப் பொறுப்புகளையோ மீண்டும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். அவர்கள் அங்கிருக்கும் சாதாரணத் தனிநபர்களாகவே பிரிட்டனில் வாசிக்க உள்ளனர்.

அதே நேரத்தில், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள தங்கள் வீட்டையும், போர்ச்சுகலில் உள்ள தங்களது தனிப்பட்ட சொத்துக்களையும் அவர்கள் தொடர்ந்து தங்கள் வசம் வைத்திருப்பார்கள் என்று அவர்களுக்கு நெருக்கமான உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

6 வருடங்களுக்குப் பிறகு ஹாரி தனது குடும்பத்துடன் பிரிட்டன் திரும்புவது, அரச குடும்பத்தினருடன் உள்ள சுமுகமற்ற உறவில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தலாம் என சர்வதேச ஊடகங்கள் கருதுகின்றன.

Prince Harry - Meghan Markle
Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com