

நாட்டின் மிகப்பெரிய ஏற்றுமதித் துறையான ஆடைத் தொழில் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வன்முறைக்குப் பின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியும், எல்லை தாண்டிய சில சக்திகளுமே காரணம் என்று பங்களாதேஷ் அமைச்சர்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
பங்களாதேஷில் நிலவி வரும் கடுமையான பொருளாதார மந்தநிலை மற்றும் தொடர் விலைவாசி உயர்வுக்கு மத்தியில், குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்து கோரி ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாட்டின் மிகப்பெரிய ஏற்றுமதித் துறையான ஆடைத் தொழில் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வன்முறைக்குப் பின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியும், எல்லை தாண்டிய சில சக்திகளுமே காரணம் என்று பங்களாதேஷ் அமைச்சர்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
டூக்கா மற்றும் காசிபூர் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் குறைந்தபட்ச மாத ஊதியத்தை உயர்த்தக் கோரி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல பகுதிகளில் வாகனப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சில இடங்களில் வன்முறை வெடித்து காவல் துறை வாகனங்கள் மற்றும் சோதனைச் சாவடிகள் மீது தாக்குதல்களும் நடத்தப்பட்டுள்ளன. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் ஏற்றுமதி வருவாயிலும் பெரும்பங்கு வகிக்கும் ஆடைத் துறை முடங்கியிருப்பது பொருளாதாரத்தை மேலும் அச்சுறுத்தியுள்ளது.
நாட்டின் ஸ்திரத்தன்மையைக் குலைக்கும் வகையில் அரசியல் ரீதியான சதி நடந்துள்ளதாகப் பங்களாதேஷ் உள்துறை அமைச்சகமும் அமைச்சர்களும் தெரிவித்துள்ளனர். தடை செய்யப்பட்ட அவாமி லீக் கட்சியுடன் தொடர்புடைய சில ஆடை ஆலை உரிமையாளர்களும், அரசியல் குழுக்களும் தங்களின் சுயலாபத்திற்காக அப்பாவித் தொழிலாளர்களைத் தூண்டிவிட்டு வன்முறையைத் திட்டமிட்டு அரங்கேற்றுவதாக அமைச்சர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், இந்த அமைதியின்மைக்கு எல்லைக்கு அப்பால் உள்ள சில தரப்பினரின் ஊக்கமும் ஆதரவும் இருப்பதாகத் தகவல்கள் வந்துள்ளதாக உள்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் நிலைமையைச் சீரமைக்கவும் அரசு உடனடியாக ஆறு பேர் கொண்ட புதிய ஊதிய வாரியக் குழுவை அமைத்துள்ளது. சட்டம்-ஒழுங்கைக் சீர்குலைக்க முயல்பவர்கள் மற்றும் வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது. இதற்கிடையில், தொழிலாளர்கள் அமைதிகாக்கும்படியும், வன்முறைச் செயல்களில் ஈடுபட வேண்டாமென்றும் அமைச்சர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.