FSSAI-ன் நடவடிக்கை - உ.பி. நிறுவனத்தின் பிஸ்கட்டுகளுக்கு நேபாளத்தில் தடை!

நிறுவனத்திற்கான உணவு தயாரிப்பு உரிமமும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
FSSAI-ன் நடவடிக்கை - உ.பி. நிறுவனத்தின் பிஸ்கட்டுகளுக்கு நேபாளத்தில் தடை!
Published on: 

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ‘சூர்யா ஃபுட் அண்ட் அக்ரோ’ நிறுவனத்தின் புகழ்பெற்ற ‘பிரியாகோல்ட்’ பிஸ்கட் வகைகளின் இறக்குமதி, விற்பனை மற்றும் விநியோகத்திற்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது.

இந்தியாவின் உணவு ஒழுங்குமுறை ஆணையம் அந்நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியதைத் தொடர்ந்து, உணவுப் பாதுகாப்பு குறித்த கவலைகளைக் காரணம் காட்டி, நேபாள அரசின் இந்த நடவடிக்கை வந்துள்ளது.

கால்நடைத் தீவனத் தவிடு பயன்பாடு

பிரியாகோல்ட் பிஸ்கட் தயாரிப்பில் நார்ச்சத்தை சேர்ப்பதற்காக, மனிதர்கள் உண்ணத் தகுதியற்ற, "மாட்டுத் தீவனத்திற்குரியது” என வகைப்படுத்தப்பட்ட தவிட்டைப் பயன்படுத்தியதாக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியானது.

இதனால், அந்த நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர்வதற்கான சட்ட நடவடிக்கைகளை FSSAI தொடங்கியுள்ளது. மேலும் நிறுவனத்திற்கான உணவு தயாரிப்பு உரிமமும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

பிஸ்கட்களின் இறக்குமதி மற்றும் விற்பனையைத் தடை செய்வதற்கான தனது முடிவுக்கு, FSSAI வெளியிட்ட அறிவிப்பையே நேபாளத் துறை அடிப்படையாகக் காட்டியதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com