ஈரான் எண்ணெய் வர்த்தகம்: இந்தியாவின் நான்கு நிறுவனங்களுக்கு அமெரிக்க அதிரடி தடை..!

ஹார்முஸ் ஜலசந்தியை நிர்வகிப்பதில் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஈரானின் பொருளாதாரத்தை முற்றிலும் முடக்க, Operation Economic Outcast என்ற திட்டத்தை அமெரிக்கா கொண்டு வந்துள்ளது.
கப்பல் போக்குவரத்து
கப்பல் போக்குவரத்து
Published on

Operation Economic Outcast (ஆபரேஷன் எகனாமிக் அவுட்காஸ்ட்) என்பது ஈரானின் பொருளாதார மற்றும் நிதி வலைப்பின்னல்களை முழுமையாக முடக்க அமெரிக்க அரசு தொடங்கியுள்ள ஒரு புதிய பொருளாதாரத் தடைத் திட்டமாகும்.

இந்த நிலையில் ஈரானில் இருந்து பெட்ரோல் மற்றும் பெட்ரோகெமிக்கல் பொருட்களை இறக்குமதி செய்ததற்காக இந்திய நிறுவனம் மற்றும் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடைவிதித்துள்ளது.

பொருளாதார தடையை எதிர்கொண்ட நிறுவனங்களில் ஒன்று Portease Partners LLP ஆகும். இந்த நிறுவனம் இந்தியாவுக்கு அதிகமாக ஈரானின் பெட்ரோகெமிக்கல் பொருட்களை இறக்குமதி செய்ததற்காக இந்த தடையை விதித்துள்ளது.

சதாஷிவ ஓவர்சீஸ் லிமிடெட்

சதாஷிவ ஓவர்சீஸ் லிமிடெட், பிபி சாஃப்ட்டெக் பிரைவேட் லிமிடெட் மற்றும் பிராக்ருட்டீஸ் இன்ஃப்ரா இம்பேக்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கும் தடை விதித்துள்ளது.

பிபி சாஃப்ட்டெக் பிரைவேட் லிமிடெட்

சதாஷிவா நிறுவனம் பிப்ரவரி 2024 முதல் ஜூன் 25 வரை ஈரானின் பெட்ரோலிய பொருட்களை பல்வேறு நிறுவனங்களில் இருந்து 69 மில்லியன் டாலர் அளவில் இறக்குமதி செய்துள்ளது. இதில் அமெரிக்காவால் நியமிக்கப்பட்ட Bonjoure Commodity FZE என்ற நிறுவனமும் அடங்கும்.

பிபி சாஃப்ட்டெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 25 மில்லியன் டாலர் அளவிற்கு இறக்குமதி செய்துள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com