நேபாளத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு.. வீடுகள், பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டதால் பரபரப்பு

பாலங்களும் அடித்துச் செல்லப்பட்டன.
நேபாளம்
Published on: 
Summary

நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நேபாளத்தின் கோர்கா மாவட்டத்தில் அமைந்துள்ள புதி கண்டகி ஆற்றில் இன்று காலை திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளம் பெருக்கெடுத்ததால் கரையோரத்தில் இருந்த பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

அதிகாலை 4 மணியளவில் ஆற்றில் திடீரென நீர்மட்டம் உயர்ந்து, இடி முழக்கம் போன்ற பயங்கர சப்தத்துடன் நீர் பெருக்கெடுத்து ஓடியதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

பாதிப்பு

ஆற்றங்கரையோரத்தில் இருந்த 5 முதல் 7 வீடுகள் முற்றிலுமாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மேலும் சில பாலங்களும் அடித்துச் செல்லப்பட்டன.

இதனால் கரையோரப் பகுதி மக்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

உயிரிழப்பு

இதுவரை 10 பேர் மாயமாகியுள்ளனர் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக கடந்த ஆகஸ்ட் 26 அன்று நேபாளத்தின் போதே கோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com