தொழில்நுட்ப இடையூறு காரணமாக அமெரிக்காவில் விமான சேவை வெகுவாக பாதிப்பு

விமானங்களை தற்காலிகமாக நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
US airport
Published on

அமெரிக்காவின் வடகிழக்கு பகுதி முழுவதும் கட்டுமான பணிகளின் போது, ​​ஒரு முக்கிய வான்வழி போக்குவரத்து கட்டுப்பாட்டு இணைப்பு செயலிழந்ததாலும், மாற்று ஃபைபர் ஆப்டிக் கேபிள் துண்டிக்கப்பட்டதாலும் விமான போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது.

இதன் காரணமாக, ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA), நெவார்க் லிபர்ட்டி, பிலடெல்பியா மற்றும் டெட்டர்போரோ உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் இருந்து வரும் சில விமானங்களை தற்காலிகமாக நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தம்:

இப்பகுதியில் உள்ள பல முக்கிய விமான நிலையங்களின் போக்குவரத்தை கையாளும் பிலடெல்பியா வான்வழி போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் ஏற்பட்ட தகவல் தொடர்பு சிக்கல்களே இந்த இடையூறுக்கு காரணம். இந்த பிரச்சினைகள் காரணமாக, சில உள்வரும் விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக FAA தெரிவித்துள்ளது.

விமானங்களை கண்காணிக்கும் வலைத்தளமான FlightAware, நெவார்க் மற்றும் பிலடெல்பியாவில் 300-க்கும் மேற்பட்ட விமானங்கள், அதாவது சுமார் 15%, தாமதமாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. நெவார்க், யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஒரு முக்கிய மையமாகவும், பிலடெல்பியா, அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மையமாகவும் விளங்குகிறது.

தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக பல விமானங்கள் மற்ற விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. நுவார்க்கில் விமானங்கள் சராசரியாக 112 நிமிடங்கள் தாமதமாவதாக Flightradar24 தெரிவித்தது. கட்டுமான பணியின் போது ஃபைபர் கேபிள் துண்டிக்கப்பட்டது.

இணைப்பை மீட்டெடுக்கும் பணி:

பிலடெல்பியா விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு நிலையத்தில் உள்ள முதன்மை சுற்று, நேற்று (திங்கள்கிழமை) காலை செயலிழந்ததாக FAA நிர்வாகி பிரையன் பெட்ஃபோர்ட் தெரிவித்தார். பின்னர், நியூ பிரன்சுவிக் மற்றும் நியூ ஜெர்சியின் நெவார்க் இடையே இருந்த மாற்று ஃபைபர் ஆப்டிக் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்ததை அந்த அமைப்பு கண்டறிந்தது.

முதன்மை இணைப்பில் புதிய மின்சுற்றை நிறுவுவதன் மூலமும், ஃபைபர் ஆப்டிக் கேபிளை சரிசெய்வதன் மூலமும் முக்கிய இணைப்பை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக FAA தெரிவித்துள்ளது.

அமெரிக்க வான்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பின் விரிவான சீரமைப்பின் ஒரு பகுதியாக, பழுதடைந்த முதன்மைச் சுற்று மாற்றப்பட ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com