பொலிவியா: ராணுவ தளத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 பேர் பலி

இந்த வெடிவிபத்தில் 50-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.
blast
Published on
Summary

பொலிவியாவில் உள்ள ராணுவ தளத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு பொலிவியா. அங்குள்ள லா பாஸ் நகரில் இருந்து 30 கி.மீ தொலைவில் ராணுவ தளம் உள்ளது. இந்த ராணுவ தளத்தில் ஏராளமான ராணுவ வீரர்கள் பணியாற்றி வருகின்றனர்.

10 பேர் பலி

இந்நிலையில், இந்த ராணுவ தளத்தில் பீரங்கி படைப்பிரிவில் நேற்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த வெடி விபத்து குறித்து தகவலறிந்ததும் தீயணைப்பு வீரர்கள், ஆம்புலன்ஸ்கள், மருத்துவ குழுக்கள் சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர்.

மீட்புக்குழுவினர் விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

படுகாயம் அடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

தீவிர விசாரணை

பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான பட்டாசு பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த பகுதியில் இருந்தே வெடிவிபத்து தொடங்கிது என தெரிவித்த அதிகாரிகள், வெடி விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com