அமெரிக்க இடைத்தேர்தலில் இயேசு கிறிஸ்து போட்டியிட்டால் கூட வெற்றி பெற்றிருக்க முடியாது: டிரம்ப் கட்சி நியூயார்க் வேட்பாளர்

அமெரிக்காவில் நவம்பர் 3 நடந்து முடிந்த இடைத்தேர்தலில் டிரம்ப் ஆதரவு பெற்ற குடியரசு கட்சி, ஜனநாயக கட்சியிடம் தோல்வியை சந்தித்தது.
Mike Lawler - Cait Conley
Published on: 
Summary

அமெரிக்க இடைத்தேர்தலில் டிரம்ப் தலைமையிலான குடியரசு கட்சி படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில், இயேசு கிறிஸ்து போட்டியிட்டால் கூட தனது மாகாணத்தில் வெற்றி பெற்றிருக்க முடியாது என நியூயார்க் ஹட்சன் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ள மைக் லாவ்லர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் நவம்பர் 3 அன்று நடந்து முடிந்த இடைத்தேர்தலில் டிரம்ப் ஆதரவு பெற்ற குடியரசு கட்சி, ஜனநாயக கட்சியிடம் தோல்வியை சந்தித்தது.

மேலும் கேன்சஸ், அயோவா, டெக்சாஸ், ஓஹியோ, மெய்ன்ம் வட கரோலினா மற்றும் தென் கரோலினா ஆகிய மாகாணங்களில் குடியரசு கட்சியின் வசமிருந்த ஏழு செனட் இடங்களை ஜனநாயக கட்சி கைப்பற்றியது.

இதன் மூலம் பிரதிநிதிகள் சபையில் சட்டம் இயற்றும் திட்டங்களை அமல்படுத்துவது டிரம்ப் தலைமையினான குடியரசு கட்சிக்கு சவாலாக மாறியுள்ளது.

மேலும் செனட் சபையில் குடியரசு கட்சி சந்தித்துள்ள தோல்வி, உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும் மூத்த அதிகாரிகளையும் நியமிக்கும் டிரம்பின் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டையாக மாறியுள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க இடைத்தேர்தலில் இயேசு கிறிஸ்து போட்டியிட்டால் கூட, வெற்றி பெற்றிருக்க முடியாது என நியூயார்க் ஹட்சன் பள்ளத்தாக்கில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ள குடியரசு கட்சி வேட்பாளர் மைக் லாவ்லர் தெரிவித்துள்ளார்.

குடியரசு கட்சி வேட்பாளர்

இதுகுறித்து மைக் லாவ்லர் கூறுகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான வாக்காளர்களின் அதிருப்தியால் தான், தனக்கான ஆதரவு அடிமட்டத்திற்கு சரிந்துவிட்டதாக கூறினார்.

மேலும், அமெரிக்க இடைத்தேர்தலில் இயேசு கிறிஸ்து போட்டியிட்டால் கூட வெற்றி பெற்றிருக்க மாட்டார் எனவும் லாவ்லர் கூறினார்.

இதைத்தொடர்ந்து பேசிய அவர், “நான் போட்டியிட்ட எந்த தேர்தலிலும், தோல்வியை ஒப்புக்கொள்ளும் வாய்ப்பு எனக்கு நேர்ந்ததில்லை.

தேர்தல் முடிவுகள் ஏமாற்றளிக்கும் வகையில் இருந்தபோதிலும், ஜனநாயக கட்சியின் வேட்பாளர் கெயிட் கான்லியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து கூறினேன்.

மேலும், அவ்வாறு செய்வதுதான் சரியான செயல் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஆகவே ஜனநாயக கட்சியின் வேட்பாளருக்கு வாழ்த்து தெரிவிப்பதோடு, அவர் நாடாளுமன்ற உறுப்பினராக செயல்படவும் வாழ்த்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

ஜனநாயக கட்சி வேட்பாளர்

இதையடுத்து நியூயார்க்கின் ஹட்சன் பள்ளத்தாக்கில் வெற்றி பெற்ற ஜனநாயக கட்சியின் வேட்பாளர் கெயிட் கான்லி, வாஷிங்டனில் வேரூன்றியுள்ள ஊழலை வேரோடு களைவதற்கும், உழைக்கும் குடும்பங்களுக்கான செலவுகளைக் குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் அமெரிக்க அரசாங்கத்தை மீண்டும் மக்களுக்கு சேவை செய்ய வைப்பதற்கு தாம் செய்ய வேண்டியவை நிறைய உள்ளதாகவும் கான்லி கூறினார்.

X