

எல் சால்வடார் நாட்டில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட நபர்களை மீட்க சென்ற பாதுகாப்பு படை வீரர்களில் மூன்று ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக, அந்நாட்டின் அதிபர் நயீப் புகலே தெரிவித்துள்ளார்.
மத்திய அமெரிக்காவில் மிகச்சிறிய மற்றும் அதிக மக்கள்தொகை அடர்த்தி கொண்ட நாடாக எல் சால்வடார் அமைந்துள்ளது.
எல் சால்வடாரின் ஹைட்டி பகுதியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக பயங்கரவாதிகள் நடத்தி வரும் தாக்குதலில், 20,000 க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து கடந்த அக்டோபர் 18 இல், சால்வடார் ராணுவ அதிகாரிகள் நான்கு பேரை பயங்கரவாதிகள் கடத்தி சென்றனர்.
இதைத்தொடர்ந்து ராணுவ அதிகாரிகளை மீட்பதற்காக சுமார் 2,500 ராணுவ வீரர்களை அதிபர் நயீப் புகலே அனுப்பினார்.
இந்த ராணுவ நடவடிக்கையில் 50க்கும் மேற்பட்ட பயங்கரவாத குழுக்கள் கொல்லப்பட்டதாகவும், மேலும் எல் சால்வடார் ராணுவ வீரர்கள் மூன்று பேர் உயிரிழந்ததாகவும் அதிபர் நயீப் புகலே தெரிவித்துள்ளார்.
மேலும் பயங்கரவாதிகள் நடத்திய ட்ரோன் தாக்குதலின் போது, ராணுவ வீரர்கள் மற்றவர்களை பாதுகாக்க வீரத்துடன் செயல்பட்டதாகவும், அவர்கள் விவேகத்துடன் செயல்பட்டு மற்ற வீரர்களின் உயிர்களை காப்பாற்றியதாகவும் அதிபர் நயீப் தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்கள் மூவருக்கும், சுமார் 1 கோடியே 80 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அதிபர் நயீப் புகலே தெரிவித்துள்ளார்.