சீனாவில் கடும் நிலநடுக்கம்: 111 பேர் பலி

6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் கட்டடங்கள் இடிந்து சேதம் அடைந்தன.200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். மீட்புப்பணி நடைபெற்று வருகிறது.
சீனாவில் கடும் நிலநடுக்கம்: 111 பேர் பலி
Published on: 

வடமேற்கு சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 111 பேர் உயிரிழந்துள்ளனர். ரிக்டர் அளவில் நிலநடுக்கம் 6.2 ஆக பதிவாகியுள்ளது. கான்சு மாகாணத்தில் 100 பேர் உயிரிழந்ததாகவும், கிங்காய் மாகாணத்தில் 11 பேரும் உயிரிழந்ததாக சீனாவின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கான்சு மாகாணத்தில் 96 பேரும், கிங்காய் மாகாணத்தில் 124 பேரும் காயம் அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் மின்சாரம், போக்குவரத்து, தகவல் தொடர்பு கட்டமைப்புகள் சேதமடைந்தன.

இந்த நிலநடுக்கம் கான்சு மாகாணத்தின் ஜிஷிஷான் கவுன்ட்டியில் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் கிங்காய் மாகாணத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் ஏற்பட்டது. இதனால் கிங்காய் மாகாணமும் பாதிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com