ட்ரூத் சோஷியல் API: அதிபர் டிரம்ப்-க்கு எதிராக வழக்குப் பதிவு

இந்த சேவை அமெரிக்க அரசியலமைப்பின் முதல் திருத்தத்தை மீறுவதாக அவர்கள் கூறினர்.
Donald Trump
அதிபர் டிரம்ப்
Published on

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்-இன் 'ட்ரூத் சோஷியல்' தளத்தில், சந்தை நிலவரத்தை மாற்றக்கூடிய சில பதிவுகள் உட்பட, அவரது பதிவுகளுக்கான கட்டண அணுகலை விற்கும் ஒரு புதிய சேவையை முடக்கக் கோரி, இரண்டு ஊடக நிறுவனங்கள் புதன்கிழமை அன்று டொனால்ட் டிரம்ப் மீது வழக்கு தொடர்ந்தன.

மன்ஹாட்டன் கூட்டாட்சி நீதிமன்றத்தில் இன்டர்செப்ட் மற்றும் ஃப்ரீடம் ஆஃப் தி பிரஸ் ஃபவுண்டேஷன் தாக்கல் செய்துள்ள புகாரானது, டிரம்ப் மீடியா & டெக்னாலஜி குரூப் வழங்கும் 'ட்ரூத் ஏ.பி.ஐ.' என்ற சேவையை எதிர்த்து சவால் விடுத்தது. இந்த சேவை, அதிபர் டிரம்பின் சொந்த கணக்கு உட்பட, 10 முக்கிய பிரமுகர்களின் 'ட்ரூத் சோஷியல்' கணக்குகளுக்கான முன்கூட்டிய அணுகலுக்காக மாதத்திற்கு 100,000 டாலர் வரை கட்டணம் வசூலிக்கிறது.

ட்ரூத் ஏ.பி.ஐ. தொடக்கம்:

வால் ஸ்ட்ரீட், செல்வந்தர்கள் மற்றும் டிரம்ப் ஆகியோரை வளப்படுத்திய அதே வேளையில், நிதி சந்தைகளின் நேர்மையை அது சீர்குலைத்ததா என்பதை விசாரிக்க அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தை, மாசசூசெட்ஸின் ஜனநாயகக் கட்சி செனட்டர் எலிசபெத் வாரன் மற்றும் கலிபோர்னியாவின் ஆடம் ஷிஃப் ஆகியோர் வலியுறுத்திய நான்கு நாட்களுக்கு பிறகு, ஆகஸ்ட் 1-ஆம் தேதி அன்று ட்ரூத் ஏ.பி.ஐ. தொடங்கப்பட்டது.

பங்குகள், எண்ணெய் மற்றும் பிற சந்தைகளின் விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சுங்க வரிகள் மற்றும் மத்திய கிழக்கு மோதல்கள் போன்ற செய்திகளை வெளியிடுவதற்கு, டிரம்ப் நீண்ட காலமாக 'ட்ரூத் சோஷியல்' தளத்தை பயன்படுத்தி வருகிறார்.

புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, கட்டண சேவை இருக்கும் வரை, வெள்ளை மாளிகை தனது அதிகாரப்பூர்வ அரசாங்க அறிவிப்புகளை 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பிரத்தியேகமாக பதிவிடுவதை தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஆழமான ஊழல்:

இதுகுறித்த புகாரில், சந்தாதாரர்கள் பதிவு செய்யும்போது அதிபதிர் நிதி ஆதாயம் அடைவதால், ட்ரூத் ஏ.பி.ஐ. சேவை "ஆழமான ஊழல் நிறைந்தது" என்று மனுதாரர்கள் குறிப்பிட்டனர்.

டிரம்பின் அறிவிப்புகளை அனைவரும் சமமாக அணுகும் உரிமை பெற்றிருப்பதாலும், டிரம்பின் பதிவுகளை தனியார் சந்தாதாரர்களுக்கு விற்று அவரை லாபம் ஈட்ட அனுமதிப்பதில் அரசாங்கத்திற்கு முறையான ஆர்வம் எதுவும் இல்லாததாலும், அந்த சேவை அமெரிக்க அரசியலமைப்பின் முதல் திருத்தத்தை மீறுவதாகவும் அவர்கள் கூறினர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com