Donald Trump | அட்டர்னி ஜெனரல் பேம் போண்டி பதவி நீக்கம்

பேம் போண்டி-க்குப் பதிலாக டெபுடி அட்டர்னி ஜெனரல் டாட் பிளான்ச் தற்காலிக அட்டர்னி ஜெனரலாகச் செயல்படுவார் என்று டிரம்ப் அறிவிப்பு
Donald Trump | அட்டர்னி ஜெனரல் பேம் போண்டி பதவி நீக்கம்
Published on: 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது அட்டர்னி ஜெனரல் பேம் போண்டியை (Pam Bondi) அதிரடியாகப் பதவியிலிருந்து நீக்கியுள்ளார்.

பேம் போண்டி-க்குப் பதிலாக டெபுடி அட்டர்னி ஜெனரல் டாட் பிளான்ச் தற்காலிக அட்டர்னி ஜெனரலாகச் செயல்படுவார் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.

ஓராண்டு காலம் அட்டர்னி ஜெனரலாகப் பணியாற்றிய பேம் போண்டி, தற்போது தனியார் துறையில் புதிய பொறுப்பை ஏற்கவுள்ளதாக டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்' தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

பேம் பாண்டி ஒரு சிறந்த அமெரிக்க தேசபக்தர் மற்றும் ஒரு விசுவாசமான நண்பர். அவர் கடந்த ஆண்டு முழுவதும் எனது தலைமை வழக்கறிஞராக உண்மையுடன் பணியாற்றினார்.

நமது நாடு முழுவதும் குற்றங்களைக் கட்டுப்படுத்தும் ஒரு மாபெரும் நடவடிக்கையை மேற்பார்வையிட்டு, கொலைகள் 1900-ஆம் ஆண்டிலிருந்து இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த நிலைக்குச் சரிந்ததில், பாம் ஒரு மகத்தான பணியைச் செய்தார்.

நாங்கள் பேமை நேசிக்கிறோம். அவர் தனியார் துறையில் மிகவும் தேவையான மற்றும் முக்கியமான ஒரு புதிய பணிக்கு மாறி இருக்கிறார். அந்தப் பணி குறித்த தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

மேலும், நமது துணைத் தலைமை வழக்கறிஞரும், மிகவும் திறமையான மற்றும் மதிக்கப்படும் சட்ட வல்லுநருமான டாட் பிளான்ச், தற்காலிகத் தலைமை வழக்கறிஞராகப் பொறுப்பேற்பார்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com