சிங்கத்தின் நாக்கில் கைக்கெடிகாரம்- வீடியோ வைரல்

கைக்கெடிகாரம் நாக்கில் இருந்தபடியே சிங்கம் கர்ஜித்தது. வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியது. இதற்கு ஆயிரக்கணக்கானோர் விருப்பங்களை தெரிவித்து உள்ளனர்.
சிங்கத்தின் நாக்கில் கைக்கெடிகாரம்- வீடியோ வைரல்
Published on: 

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விலங்குகள் ஆர்வலரும், கால்நடை மருத்துவருமான குளோ என்பவர் சிங்கத்தின் நாக்கில் ஸ்மார்ட் கைக்கெடிகாரம் ஒன்றை பொருத்தினார். அப்போது சிங்கத்தின் இதயத்துடிப்பை அந்த கைக்கெடிகாரம் காட்டியது.

மேலும் கைக்கெடிகாரம் நாக்கில் இருந்தபடியே சிங்கம் கர்ஜித்தது. இந்த நிகழ்வை அவர் வீடியோவாக எடுத்து `இதனைவிட சுவாரசியமானது என்னவென்று எனக்கு தெரியவில்லை' என்ற பின்குறிப்புடன் சமூகவலைதளத்தில் பதிவிட்டார்.

இவரது இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியது. இதற்கு ஆயிரக்கணக்கானோர் விருப்பங்களை தெரிவித்து உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com