கிரீன்லாந்தை கைப்பற்ற போவதாக டிரம்ப் அறிவித்ததை தொடர்ந்து, அடிபணிந்த டென்மார்க் அரசு

அமெரிக்கா-டென்மார்க் புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் ஆர்க்டிக் பாதுகாப்பையும் கிரீன்லாந்து சுயநிர்ணய உரிமையையும் வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது.
கிரீன்லாந்தை கைப்பற்ற போவதாக டிரம்ப் அறிவித்ததை தொடர்ந்து, அடிபணிந்த டென்மார்க் அரசு
Published on
Summary

டென்மார்க் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள கிரீன்லாந்தை, அமெரிக்கா கைப்பற்ற போவதாக டிரம்ப் அறிவித்த நிலையில், கிரீன்லாந்தின் பாதுகாப்பு குறித்து அமெரிக்காவும் டென்மார்க்கும் ஒரு ஒப்பந்தத்தை அறிவித்துள்ளன.

டிரம்ப் அச்சுறுத்தல்

கிரீன்லாந்து பிரதேசம் ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளால் எளிதில் தாக்கப்படக்கூடிய நிலையில் இருப்பதாக டிரம்ப் கடந்த காலங்களில் கூறி வந்தார்.

மேலும் அவர் கனிவளம் நிறைந்த, ஓரளவு தன்னாட்சி பெற்ற டேனிஷ் பிரதேசத்தை தங்கள் கட்டுப்பாட்டில் இணைத்துக்கொள்ள பல மாதங்களாக முயற்சியும் செய்து வந்தார்.

இதையடுத்து டிரம்ப் கிரீன்லாந்தில் ராணுவ நடவடிக்கை எடுப்பதாக அச்சுறுத்தியதை அடுத்து, டேனியர்கள் மற்றும் பிற நேட்டோ நாடுகளிடமிருந்து கடும் எதிர்ப்பு அதிகரித்தது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், டேனிஷ் பிரதேசமான கிரீன்லாந்தை அதன் அமைவிடம் மற்றும் கனிம வளங்களை சுட்டிக்காட்டி கைப்பற்றப் போவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

டென்மார்க் பிரதமர்

டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட அச்சுறுத்தலை தொடர்ந்து, கிரீன்லாந்தின் பாதுகாப்பு குறித்தான ஒப்பந்தத்திற்கு தாங்கள் ஒத்துழைப்பதாக டென்மார்க் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த ஒப்பந்தம், “ஆர்க்டிக் மற்றும் வட அட்லாண்டிக் பகுதிகளில் பாதுகாப்பை வலுப்படுத்துகிறது” என்று டென்மார்க் பிரதமர் கூறியுள்ளார்.

அடுத்த வாரம் ஐக்கிய நாடுகள் பொது சபையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் எனவும் டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த ஒப்பந்தம் ஆர்க்டிக் மற்றும் வட அட்லாண்டிக் பகுதிகளில் நமது பொதுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு, ராச்சியத்தின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டையும், கிரீன்லாந்து மக்களின் சுயநிர்ணய உரிமையையும் அங்கீகரிக்கிறது.

இந்த ஒப்பந்தத்திற்கு இன்னும் சட்டமன்ற உறுப்பினர்களின் ஒப்புதல் தேவை என்றும், அது அமலுக்கு வருவதற்குத் தேவையான நாடாளுமன்ற நடைமுறைகளைக் கடக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஆனால் டிரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டிருந்த ஒப்பந்தத்தின் குறிப்பிட்ட அம்சங்கள் குறித்து டென்மார்க் பிரதமர் கருத்து எதுவம் தெரிவிக்கவில்லை.

ட்ரூத் சோஷியல் தளம்

இதையடுத்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியிட்ட பதிவில், “ இந்த ஒப்பந்தம் அமெரிக்காவிற்கு எந்தச் செலவும் இல்லாமல் ஏற்பட்டுள்ளது. கிரீன்லாந்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் தற்காப்பதற்கும், மேலும்தேவையானதைச் செய்வதற்கான திறனை அமெரிக்காவிற்கு இது வழங்கும்.

எங்களின் தெளிவான எழுத்துப்பூர்வ ஒப்புதல் இல்லாமல், எந்தவொரு அமெரிக்க எதிரி நாடும் கிரீன்லாந்தில் ராணுவ இருப்பை நிலைநிறுத்தவோ அல்லது கிரீன்லாந்தில் முக்கிய முதலீடுகளைச் செய்யவோ முடியாது” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ இதனை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் என்றும், அமெரிக்காவிற்கும் அமெரிக்க மக்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com