

நேபாளத்தில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 600 ஐ எட்டியுள்ளது. சுமார் 1,500 பேர் இன்னும் மாயமாகியுள்ளனர்.
லடாக்கில் இமயமலை பகுதியில் பனிப்பாறை சரிந்து நதியில் விழுந்து பாதையை அடைத்தால் அணை உடைந்து நீர் வேகமாக கீழ்நோக்கி நேபாளத்தின் புகுந்ததே வெள்ளபெருகுக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
ரசுவா மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்கள் இதில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வெள்ளவதில் நேபாளத்தில் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.
மீட்புப்பணிகளில் அந்நாட்டு ராணுவமும் இணைந்துள்ளது. இதனிடையே சர்வதேச நாடுகள் பல மீட்புப் குழுக்களை அனுப்பி உதவ முன்வந்த நிலையில் அந்த உதவியை பாலன் ஷா தலைமையிலான நேபாள அரசு நிராகரித்தது.
கடந்த 2015 இல் சுமார் 9000 பேர் உயிரிழந்த நேபாள நிலநடுக்கத்தின்போது சர்வதேச மீட்பு குழுக்கள் நேபாளம் வந்தன. அப்போது உள்நாடு மற்றும் வெளிநாடு என அனைத்து மீட்பு குலுக்களையும் ஒருங்கிணைத்து மீட்பு பணியில் ஈடுபடுவதில் சிக்கல் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
இதை கருத்தில் கொண்டு, தனது சொந்தப் பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை முகமைகளே நிவாரண மற்றும் மீட்புப் பணிகளைக் கையாளும் திறன் கொண்டவை என்று நேபாளம் கூறியிருந்தது.
ஏதேனும் குறிப்பிட்ட தொழில்நுட்ப உதவி தேவைப்பட்டால், தானே மற்ற நாடுகளிடம் உதவி கேட்கும் என்றும் அரசு தெரிவித்திருந்தது.
இந்த சூழலில் நேபாள அரசு தனது முடிவை மாற்றி உதவியை ஏற்க முன்வந்துள்ளது. இந்த வெள்ளபெருக்கில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்தவர்களும் காணாமல் போயுள்ளனர். எனவே சர்வதேச குழுக்களை வேண்டாம் என நேபாள அரசு கூறுவது முறையற்றது என விமர்சிக்கப்பட்டது.
சர்வதேச அழுத்தத்திற்குப் பிறகு சில வெளிநாட்டு மீட்புக் குழுக்கள் மற்றும் அதில் அனுபவமிக்க நிபுணர்களுக்கு வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அறிக்கைகளின்படி, வெள்ளத்திற்குப் பிறகு தங்களது குடிமக்கள் காணாமல் போன நாடுகளிடமிருந்து நேபாள அரசுக்குக் கடுமையான அழுத்தம் கொடுக்கப்பட்டது.
இதையடுத்தே, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் பங்கேற்க இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான வெளிநாட்டு நிபுணர்கள் மற்றும் மீட்பு குழுக்களுக்கு நேபாளம் அனுமதி அளித்துள்ளது.
நேபாளத்திற்கு உதவுவதற்காக இந்தியா ஏற்கனவே பெருமளவிலான நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளது. இது தவிர, தேசிய பேரிடர் மீட்புப் படையின் குழுக்களையும் நேபாளத்திற்கு அனுப்ப இந்தியா முன்வந்துள்ளது.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் தகவல்படி, நேபாள குறைந்தது 320 இந்தியர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
அதே நேரத்தில், சுமார் 400 இந்தியர்கள் சீனப் பகுதியில் மாட்டிக்கொண்டனர். அவர்களில் 153 இந்தியர்கள் பாதுகாப்பாக நேபாளத்தை வந்தடைந்துள்ளனர்.
இந்திய அரசு நேபாளத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதுடன், தேவைப்பட்டால் அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக உள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், பயிற்சி பெற்ற என்டிஆர்எப் குழு மற்றும் தேவையான உபகரணங்களை நேபாளத்திற்கு அனுப்ப இந்தியா முன்வந்துள்ளதாகத் தெரிவித்தார்.
இந்தக் குழுக்களின் உதவியுடன் மாயமானவர்களைத் தேடும் பணி மற்றும் மீட்பு நடவடிக்கைகள் வேகம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.