நேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 46 ஆக அதிகரிப்பு

அதிகாரிகள் தற்போதைய நிலவரத்தை ஆய்வுசெய்து வருகின்றனர்.
flood
Published on

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.

கடும் சேதம்

திபெத் எல்லைக்கு அருகே நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம், குடியிருப்புகள், வாகனங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை கடுமையாக சேதப்படுத்தியது.

இதனால் சேதங்களை மதிப்பிடுவதிலும், குறிப்பாக ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கான மீட்புப் பணிகளை விரைவுபடுத்துவதிலும் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி, திபெத் பகுதியிலிருந்து பாய்ந்து வந்த திடீர் வெள்ள நீர், காலை 9 மணியளவில் நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போடே கோஷி ஆற்றில் கலந்தது. இது டிமுரே மற்றும் சியாப்ரு பெசி ஆகிய பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

அதிகாரிகள் தற்போதைய நிலவரத்தை ஆய்வுசெய்து வருகின்றனர். சேதத்தின் முழு அளவு மற்றும் உயிரிழப்புகள் குறித்த விவரங்கள் முழுமையாகத் தெரியவரவில்லை.

நேபாள பிரதமர் அவசரக் கூட்டம்

வெள்ளப் பெருக்கினால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்கும், தற்போதைய நிலவரத்தை ஆய்வு செய்வதற்கும் அமைச்சரவையின் முக்கிய அவசரக் கூட்டத்தினை நேபாள பிரதமர் பாலன் ஷா கூட்டினார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த அவரது அரசாங்கம் நேபாள ராணுவம், ஆயுதக் காவல் படை மற்றும் நேபாள காவல்துறையை அனுப்பியது. பாதிக்கப்பட்ட பகுதிக்கு 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டதாக செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

போட்டே கோஷி மற்றும் திரிசூலி ஆற்றுப் படுகைகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும், பாதுகாப்பான இடங்களுக்கு விரைந்து செல்லுமாறும் அதிகாரிகள் வலியுறுத்தினர்.

46 பேர் பலி

இந்நிலையில், நேபாளத்தில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 46 ஆக உயர்ந்துள்ளது. நூற்றுக்கணக்கானோரின் நிலை என்னவென தெரியவில்லை. தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com