போதைப் பொருள் வழக்கு: தொலைக்காட்சி பெண் தொகுப்பாளர் உள்பட 12 பேருக்கு மரண தண்டனை- எகிப்து நீதிமன்றம் தீர்ப்பு

பிரபல தொலைக்காட்சி பெண் தொகுப்பாளர் சாரா கலிபா உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Egypt TV Presenter
Published on

போதைப் பொருள் வழக்கில் தொலைக்காட்சி பெண் தொகுப்பாளர் உள்பட 12 பேருக்கு மரண தண்டனை விதித்து எகிப்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

எகிப்தில் போதைப்பொருள் வழக்கில் பிரபல தொலைக்காட்சி பெண் தொகுப்பாளர் சாரா கலிபா உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப் பொருட்களை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களை இறக்குமதி செய்த குற்றக் கும்பலின் ஒரு பகுதியாக அவர்கள் செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. இதில் சாரா கலிபா உள்பட 12 பேருக்கு மரண தண்டனையை எகிப்து கோர்ட்டு விதித்து தீர்ப்பு அளித்து உள்ளது.

மேலும், 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 7 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தீர்ப்பு கடந்த மாதம் அறிவிக்கப்பட்டிருந்தாலும், மரண தண்டனை வழக்குகளில் நீதிமன்றம், எகிப்தின் தலைமை முப்தியிடமிருந்து கருத்தை பெற வேண்டும்.

அதன்படி அந்த கருத்தை பெற்ற பிறகே இந்த மரண தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com