WhatsApp சி.இ.ஓ. ஆகிறார் CRED நிறுவனர் குணால் ஷா..!

CRED நிறுவனர் குணால் ஷா, வாட்ஸ்அப்பின் சிஇஓ-வாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மெட்டா கிரெட்டின் 20 சதவீதம் பங்குகளை வாங்குகிறது.
குணால் ஷா
குணால் ஷா
Published on

CRED-ன் தலைவரும், நிறுவனருமான குணால் ஷா, வாட்ஸ்அப் நிறுவனத்தின் சிஇஓ ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெட்டா (Meta) கிரெட் (CRED) நிறுவனத்தின் 20 சதவீதம் பங்குகளை வாங்குகிறது.

20 சதவீதம் பங்குகளை வாங்கும் மெட்டா, கிரெட்டில் ஏறத்தாழ 8550 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுளு்ளது.

கிரெட் நிறுவனத்தின் சிஇஓ பதவியில் இருந்து குணால் ஷா, அதன்பின் மெட்டாவின் உலகளாவிய தலைமைத்துவம் அணியில் இணைய உள்ளார். செயற்கை நுண்ணறிவு சார்ந்த முன்னெடுப்புகளில் கவனம் செலுத்தும் புதிய பொறுப்பிற்குச் செல்லும் கேத்கார்ட்டிடமிருந்து அவர் அப்பொறுப்பை ஏற்றுக்கொள்வார்.

விளம்பரம் மற்றும் சந்தா சார்ந்த தயாரிப்புகள் மூலம் வருவாயை அதிகரிப்பதுடன், செயற்கை நுண்ணறிவு (AI) முகவர்களைத் தளத்தில் ஒருங்கிணைப்பதற்கும் முன்னுரிமை அளித்து, வாட்ஸ்அப்பின் (WhatsApp) அடுத்தகட்ட வளர்ச்சியை வழிநடத்தும் பொறுப்பை ஷா (Shah) ஏற்பார் என்று மெட்டா (Meta) தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com