லண்டனில் ரூ.12,300 கோடி முதலீடுகளை ஈர்த்த முதலமைச்சர் விஜய்

முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு விஜய் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.
TN CM Vijay
Published on

தமிழ்நாட்டின்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் விஜய் செப்டம்பர் 10 முதல் 16 ஆம் தேதி வரை பிரிட்டன் பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக, கடந்த 10ம் தேதி அவர் லண்டன் புறப்பட்டார். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு விஜய் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

அவரது குழுவில், விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் செயலர் மேகநாத ரெட்டி, தொழில் துறை வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் தீபக் ஜேக்கப் மற்றும் அரசு அலுவலர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ரூ.11 கோடி முதலீடு

இந்நிலையில், லண்டனில் தமிழ்நாட்டில் ரூ.11,000 கோடியில் முதலீடு செய்ய, முதலமைச்சர் விஜய் தலைமையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்துடன் நடந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தால் 7,000 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகிடும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய திறன் மையம்

இங்கிலாந்து நிறுவனம் ரூ.1,000 கோடி முதலீடு தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்களை விரிவுபடுத்தவும், நிறுவுவதற்கும் 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது.

சுமார் 1.000 கோடி ரூபாய் முதலீட்டையும், 2.000-க்கும் மேற்பட்ட உயர் மதிப்புடைய புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் வகையில் இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னணி தகவல் தொடர்பு நிறுவனம், மவுண்ட் பூந்தமல்லி சாலையில் GCC corridor பகுதியில் மையத்தை அமைக்கவுள்ளது.

தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனம், ஏர்ன்ஸ்ட் & யங் நிறுவனத்துடன் ஒப்பந்தம். ஸ்வீடனைச் சேர்ந்த சிக்மா டெக்னாலஜி குரூப் நிறுவனத்துடனும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

ரூ.300 கோடி முதலீடு

தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறையின் அடுத்த கட்ட வளர்ச்சியாக ரூ.300 கோடி முதலீட்டில் 400 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 'வில்சன் பவர் சொல்யூஷன்ஸ்' நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com