"வாழ்க்கையில் நிம்மதி இல்லை": மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு உணவு விநியோக ஊழியராக மாறிய சீன பெண் மருத்துவர்!

ஒரு வேளையில் நிம்மதி இல்லை என்றால் அந்த வேலைய விட்டு பிடித்த வேலையை தேடுங்கள் அது நிம்மதி தரும் - லியு
Lifestyle Choice
Published on: 
Summary

மனநல மருத்துவத்துறையில் முனைவர் பட்டம் பெற்று, நாட்டின் மிக உயரிய மருத்துவமனையில் பணியாற்றி வந்த 31 வயது சீனப் பெண் மருத்துவர் ஒருவர், தனது கௌரவமான மருத்துவப் பணியை உதறிவிட்டு பகுதிநேர உணவு விநியோக ஊழியராகவும் , மதுவகக் பாடகராகவும் மாறியுள்ளார். இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

கடின உழைப்பும் மருத்துவப் பயணமும்

சீனாவின் ஹெபெய் மாகாணத்தைச் சேர்ந்தவர் லியு ஜிஹான் . கடுமையான மற்றும் ராணுவக் கட்டுப்பாடுகள் நிறைந்த கல்வி முறைக்கு புகழ்பெற்ற பள்ளியில் படித்து வளர்ந்த இவர், சிச்சுவான் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பை முடித்தார்.

தொடர்ந்து, மக்காவ் பல்கலைக்கழகத்தில் தனது 27 வயதிலேயே மனநல மருத்துவத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். 2022-ஆம் ஆண்டு முதல் ஜுஹாய் நகரில் உள்ள நாட்டின் மிக மதிப்புமிக்க மருத்துவமனை ஒன்றில் மனநல மருத்துவராகவும், ஆராய்ச்சியாளராகவும் பணியாற்றத் தொடங்கினார்.

மருத்துவப் பணியும் மன அழுத்தமும்

மருத்துவமனையில் இவரது கனிவான சிகிச்சை முறையால் பல நோயாளிகள் இவருக்குக் கடிதங்கள் மூலமும், பாராட்டுகள் மூலமும் தங்களது நன்றியைத் தெரிவித்தனர்.

மனிதர்களிடையே உண்மையான அன்பான தொடர்பையே தான் விரும்புவதாகக் கூறும் லியு, காலப்போக்கில் மருத்துவமனையின் கடுமையான நேரக் கட்டுப்பாடுகள் மற்றும் தொடர் அழுத்தங்கள் நிறைந்த வழக்கமான வாழ்க்கை முறைக்குத் தன்னை உட்படுத்திக் கொள்ள மிகவும் சிரமப்பட்டார்.

திடீர் முடிவு

முனைவர் படம் பெற்றால் நிலையான வேலை, நல்ல வருமானம், சமூக அங்கீகாரம் கிடைக்கும் என்றாலும், அது தனக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை என்பதை உணர்ந்த லியு, கடந்த பிப்ரவரி மாதம் தனது மருத்துவப் பதவியை ராஜினாமா செய்தார்.

சில காலம் சுற்றலா சென்ற அவர், பின்னர் காலை உணவு விற்கும் கடை, மதுவகங்களில் பாடுவது, மற்றும் உணவு விநியோகம் செய்வது போன்ற எளிய பகுதிநேரத் தொழில்களைச் செய்யத் தொடங்கினர்.

நெகிழ்ச்சியான புதிய வாழ்க்கை

சமூகத்தில் எளிய தொழில்களாகக் கருதப்படும் இந்த வேலைகளில் தனக்குக் கிடைத்த அனுபவம் குறித்து லியு கூறுகையில், "இங்குள்ள உணவக உரிமையாளர்கள், கடைகாரர்கள் மற்றும் டெலிவரி ஊழியர்களிடம் இருக்கும் நேர்மறை எண்ணமும், எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் குணமும் எனது முந்தைய வாழ்க்கையில் இல்லை.

மதிப்பெண்கள், பதவிகள் மற்றும் போட்டிகளை விட, மனிதர்களிடையே இருக்கும் பரஸ்பர அக்கறையும் ஆதரவும் தான் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

தற்போது தனது வாழ்வாதாரச் செலவுகளுக்காக இந்த எளிய வேலைகளைச் செய்து வரும் லியு, மன அழுத்தம் இல்லாத வாழ்க்கையே சிறந்தது என்று கூறுகிறார். அதே சமயம், தனது மருத்துவ அறிவைப் பயன்படுத்தி பகுதிநேரமாகத் தேவைப்படுபவர்களுக்கு மனநல ஆலோசகராகவும் அவர் தொடர்ந்து உதவி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com