தென் சீன கடலில் மூழ்கிய வியட்நாம் கப்பல்.. 39 பேர் மீட்பு - மாயமான 23 பேரை தேடும் பணி தீவிரம்

இந்த விபத்து நிகழ்ந்த ஸ்ப்ராட்லி தீவுகள் பகுதி, பல நாடுகள் சொந்தம் கொண்டாடும் சர்ச்சை கடல்பகுதியில் அமைந்துள்ளது.
தேடுதல் பணி
தேடுதல் பணி
Published on

தென்சீனக் கடலில் வியட்நாம் சரக்குக் கப்பல் மூழ்கியதில் 23 பேர் மாயமாகியுள்ளனர்.

விபத்து

வியட்நாமைச் சேர்ந்த சரக்கு கப்பல் மூழ்கியதில், அதில் இருந்த 23 பணியாளர்களைக் காணவில்லை என்றும், அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும்

வியட்நாமின் Khoi Nguyen 18 என்ற சரக்குக் கப்பல், நேற்று தென்சீனக் கடலில் ஸ்ப்ராட்லி தீவுகள் அருகே Fiery Cross Reef பகுதியில் சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது.

இக்கப்பலில் மொத்தம் 62 பணியாளர்கள் இருந்தனர். அவர்களில் 39 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சிய 23 பேரைக் கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தேடுதல் வேட்டை

சீனாவை சேர்ந்த 6 மீட்புக் கப்பல்கள் ஒரு ஹெலிகாப்டர் மற்றும் வியட்நாமை சேர்ந்த கப்பல் ஆகியவை இணைந்து காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன.

சர்ச்சை கடல் பகுதி

இந்த விபத்து நிகழ்ந்த ஸ்ப்ராட்லி தீவுகள் பகுதி, பல நாடுகள் சொந்தம் கொண்டாடும் சர்ச்சை கடல்பகுதியில் அமைந்துள்ளது.

தென்சீனக் கடலின் பெரும்பகுதியை சீனா தன்னுடைது என கூறி வருகிறது. ஆனால் வியட்நாம், பிலிப்பைன்ஸ், புருனை, மலேசியா மற்றும் தைவான் ஆகிய நாடுகளும் சில பகுதிகளுக்கு உரிமை கோரி வருகின்றன.

தென்சீனக் கடலில் சீனா செயற்கையான தீவுகளை உருவாக்கி ராணுவ முகாம்களை அமைத்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com