சீனா: அதிகாலையில் வெடிவிபத்து.. 7 பேர் பலி - 17 பேர் காயம்

இன்று அதிகாலை 1:40 மணியளவில் திடீரென வெடிவிபத்து நேரிட்டுள்ளது.
வெடிவிபத்து
வெடிவிபத்து
Published on

சீனாவின் தன்னாட்சி மாகாணமான குவாங்சி குவாங்சி மாகாணத்தின் சிங்ஆன் கவுண்டி என்ற இடம் உள்ளது.

இங்குள்ள லிங்சியாங் சாலை அருகே அமைந்துள்ள குடியிருப்பு கட்டடம் ஒன்றில் இன்று அதிகாலை 1:40 மணியளவில் திடீரென வெடிவிபத்து நேரிட்டுள்ளது.

மீட்பு

தகவலறிந்து தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டனர்.

கட்டிட இடிபாடுகளுக்கு இடையே சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன.

இடிபாடுகளில் இருந்து இதுவரை 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. விபத்தில் காயமடைந்த 17 பேர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி, அவர்கள் யாரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை என்றும், அனைவரது உடல்நிலையும் சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

காரணம்

இந்த விபத்து கட்டிடத்தின் தரைத்தளத்தில் இருந்த கேஸ் பைப் லைன் வெடிபால் நிகழ்ந்தது என கருதப்பட்ட நிலையில் பைப் லைன் ஏதும் வெடிக்கவில்லை என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். விபத்துக்கான சரியான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com