

இத்தாலியில் உள்ள சுயாட்சி பெற்ற தீவு சிசிலி. இந்த தீவில் உள்ள மிகப்பெரிய 2-வது விமான நிலையம் கேடானியா விமான நிலையம் ஆகும். இந்த விமான நிலையம் அருகே எட்னா என்ற எரிமலை வெடித்தது. இதனால் எரிமலை தீயை கக்கியது. இதனால் வானில் சாம்பல் துகள் கலந்துள்ளது.
இதனால் நாளை வரை விமான நிலையம் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை அதிகாலை 2 மணி வரை விமானங்கள் வருகையோ அல்லது புறப்பாடோ இருக்காது என்று விமான நிலையம் அறிவித்துள்ளது. பயணிகள் தங்கள் விமான நிறுவனத்திடம் தகவல்கள் சரிபார்த்த பின்னரே விமான நிலையத்திற்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஒரு வாரத்திற்கு முன்பு எரிமலை வெடிப்பு தொடங்கியதிலிருந்து நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, தாமதப்படுத்தப்பட்டுள்ளன அல்லது மாற்றுப் பாதைகளுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளன.
விமான நிலையத்தின் உள்கட்டமைப்பின் மீது ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பு கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையானது என்று தெரிவித்துள்ளது.