சிரிப்பு காட்டாதீங்க.. ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய கனடாவுக்கு வந்த அழைப்பு பற்றி டிரம்ப்

கனடாவுக்கு ஐரோப்பிய ஆணையத்தின் தலைவா் உா்சுலா வான் டொ் லேயன் அழைப்பு விடுத்துள்ளாா்.
டிரம்ப்
டிரம்ப்
Published on
Summary

ஐரோப்பிய ஒன்றியத்தில் கனடா இணைவதற்கு டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

அண்டை நாடான கனடாவுடன் டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா வர்த்தக போர் நடத்தி வருகிறது. கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணம் என்றே டிரம்ப் சொல்லி வருகிறார்.

இதற்கு மார்க் கார்னி தலைமையிலான கனடா அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் பதில் வரிவிதிப்புகளை மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே, கனடா அமெரிக்காவிடம் இருந்து தனது நலன்களை பாதுகாத்துக்கொள்ள, ஐரோப்பிய யூனியனில் இணைவதற்கு முயற்சி செய்து வருகிறது. இதற்கான வேலைகளும் நடந்து வருகின்றன.

இணை உறுப்பினர் ஆக அழைப்பு

ஐரோப்பிய யூனியனின் முதல் இணை உறுப்பினராக இணையுமாறு கனடாவுக்கு ஐரோப்பிய ஆணையத்தின் தலைவா் உா்சுலா வான் டொ் லேயன் அழைப்பு விடுத்துள்ளாா்.

பிரான்சில் நடைபெற்ற ஐரோப்பிய நாடாளுமன்ற கூட்டத்தொடரில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கனடா பிரதமா் மாா்க் காா்னியின் முன்னிலையில், யூனியனின் ஆண்டு நிலை குறித்த உரையாற்றியபோது உா்சுலா வான் டொ் லேயன் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டாா்.

அமெரிக்காவுக்கு ஏறக்குறைய 70 சதவீத ஏற்றுமதியை செய்து வருகிறது கனடா.

ஐரோப்பிய யூனியனில் கனடா இணை உறுப்பினராவதன் மூலம் பாதுகாப்பு, எரிசக்தி, அரிய கனிம வளங்கள், பேட்டரி உற்பத்தி, ஏ.ஐ., குவாண்டம் தொழில்நுட்பம் மற்றும் சைபா் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கியத் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு பெரிய அளவில் மேம்படும்.

டிரம்ப் எதிர்ப்பு

இது அமெரிக்க அதிபர் டிரம்ப்பை வெகுவாக எரிச்சலூட்டியுள்ளது. இதுகுறித்த பேசிய டிரம்ப் தனது ஆற்றாமையை வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் கூறுகையில், "ஐரோப்பிய ஒன்றியத்தில் கனடா இணைவது என்பது சிரிக்கத்தக்கது. ஐரோப்பிய தலைவர்கள் கனடாவை உறுப்பினராக சேர்த்து கொள்வது நல்ல நோக்கத்தில் இருந்தால் நலம்.

அப்படி இல்லாமல் கெட்ட உள்நோக்கத்துடன் இருக்கும் என்றால், ஐரோப்பிய நாடுகள் மீது நாங்கள் பெரிய அளவில் வரிகளை விதிப்போம். ஐரோப்பாவின் சில பகுதிகளில் வர்த்தகங்களை நிறுத்தி கொள்வோம்" என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் கூட்டம் ஒன்றில் பேசும்போது, "ஐரோப்பிய நாடுகளை நாம் சுமந்து கொண்டிருக்கிறோம். எங்களிடம் கார்கள் உள்ளன. கட்டிடங்கள் எழுப்ப தேவையான மரக்கட்டைகள் உள்ளன. உணவு உள்ளது. எல்லாமும் எங்களிடம் உள்ளது" என கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com