கனடாவில் நாய் போட்டி - 56 நபர்களை தாண்டி உலக சாதனை படைத்த பெண் நாய்

56 நபர்களை 16 வினாடிகளில் தாண்டி ஆஸ்திரேலியன் ஷெப்பர்ட் நாய் கின்னஸ் சாதனை படைத்தது.
Canada Dog Jump Record
Published on

கனடாவில் அதிகம் தூரம் தாண்டும் நாய்களுக்கான போட்டியில், 56 நபர்களை தாண்டி ஆஸ்திரேலியன் ஷெப்பர்ட் நாய் ஒன்று உலக சாதனை படைத்தது.

கனடா நாய் போட்டி

கனடாவின் எட்மன்டன் நகரில் உ ள்ள ஒரு பொதுவெளி மைதானத்தில் கடந்த ஜூன் 14 அன்று, எட்மன்டன் ரிவர்ஹாக்ஸ் பேஸ்பால் அணி ஒரு போட்டியை நடத்தியது.

அந்த போட்டியில் மைதானத்தில் சற்று குனிந்த நிலையில் இருந்த மனிதர்களை, பயிற்சி பெற்ற நாய்கள் ஒரு நிமிடத்திற்குள் தாண்டும் போட்டி நடைபெற்றது.

அந்த போட்டியில் ஜெனிபர் ஃப்ரேசர் என்பவரால் பயிற்சி அளிக்கப்பட்ட நான்கு வயது ஆஸ்திரேலியன் ஷெப்பர்ட் நாயான ‘ஷார்டோனே’ என்ற பெண் நாய் கலந்துகொண்டது.

56 நபர்களை தாண்டிய பெண் நாய்

எட்மன்டன் மைதானத்தில் 56 நபர்கள் வரிசையாக சற்று குனிந்த நிலையில் நின்றனர்.

அப்போது ஷார்டோனே, 16 வினாடிகளில் அங்கே நின்று கொண்டிருந்த நபர்களை தாண்டி கின்னஸ் உலக சாதனை படைத்தது.

நாய் பயிற்சியாளர்

இந்த போட்டி குறித்து நாய் பயிற்சியாளர் ஃப்ரேசர் கூறுகையில், சில ஆண்டுகளுக்கு முன்பு ஷார்டோனேயை தன் முதுகை தாண்டுவதற்கு பயிற்சி அளித்ததாகவும், அதன் பிறகு அந்த நாயின் திறமைகள் பெரிதளவில் அதிகரித்ததாகவும் கூறினார்.

மேலும் மனிதர்களை தாண்டுவது ஷார்டோனே நாயின், பல திறமைகளில் ஒன்றுதான் என்றும் அவர் குறிப்பிட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com