பிரிக்ஸ் உச்சி மாநாடு: ஐக்கிய அரபு அமீரக அதிபருக்கு பிரதமர் மோடி அழைப்பு!

2026 ஆம் ஆண்டில் இரு தலைவர்களுக்கும் இடையே நடைபெறும் மூன்றாவது சந்திப்பு.
Modi
Published on

பிரான்ஸ் நாட்டின் எவியன் நகரில் ஜி7 உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்றார்.

இதன் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடியும், ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானும் சந்தித்தனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு இறுதியில் இந்தியா நடத்தவிருக்கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் இந்த ஆண்டில் இரு தலைவர்களுக்கும் இடையே நடைபெறும் மூன்றாவது சந்திப்பு இதுவாகும். 

இது இந்தியா-ஐக்கிய அரபு அமீரக விரிவான மூலோபாய கூட்டாண்மையின் வலிமையைப் பிரதிபலிக்கிறது.

முன்னதாக கடந்த ஜனவரியில் ஷேக் முகமது பின் சயீத் இந்தியாவுக்கும், மே மாதம் மோடி ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் பயணங்கள் மேற்கொண்டனர்.

மேலும் தொழில்நுட்பம், வர்த்தகம், முதலீடு, எரிசக்தி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இருவரும் ஆய்வு செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com