ஆட்குறைப்பு பணியில் ஆப்பிள் நிறுவனம் - ஏ.ஐ வளர்ச்சியை கருத்தில் கொண்டு நடவடிக்கை

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு ஆப்பிள் நிறுவனம் மொபைல் போன்கள் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து வருகிறது.
Apple layoff
Published on: 
Summary

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக டெர்னஸ் பொறுப்பேற்ற பின்பு, நிர்வாக அடுக்குகளில் பல்வேறு வகையில் மறுசீரமைப்பு நடைபெற்று வரும் சூழலில், செயற்கை நுண்ணறிவை கருத்தில் கொண்டு ஆட்குறைப்பு பணிகளை துரிதப்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு ஆப்பிள் நிறுவனம் மொபைல் போன்கள், லேப்டாப் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக டிம் கூக் கடந்த 15 ஆண்டுகள் பணியாற்றி வந்தார்.

இவர் சமீபத்தில் ஓய்வு பெற்று பதவி விலகிய நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக ஜான் டெர்னஸ் என்பவர் பதவியேற்று கொண்டார்.

இவர் பதவி ஏற்றதை தொடர்ந்து, ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பு மேம்பாடு விரைவுபடுத்தப்பட்டு, நிர்வாக அடுக்குகளில் ஒரு பரந்த மறுசீரமைப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனம், முக்கிய பொறுப்பில் பதவி வகித்து வரும் இயக்குநர்கள் உட்பட பொறியியல் திட்ட மேலாளர்களை பணி நீக்கம் செய்ய பரீசிலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் மூலம் பொறியாளர்களுக்கும் மூத்த நிர்வாகிகளுக்கும் இடையிலான படிநிலைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, முக்கிய முடிவுகளை எடுப்பவர்கள் பொறியியல் குழுக்களை நேரடியாக அணுகுவதற்கு வழிவகை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் தனது வரவுசெலவு திட்டங்களையும் மறுபரிசீலனை செய்து வருகிறது; இதன்மூலம் 2027-ல் அதிக வரவுசெலவுத் திட்டங்களையும் பணியாளர் எண்ணிக்கையையும் எதிர்பார்த்திருந்த சில பிரிவுகளுக்கு, இனி ஊதிய உயர்வு வழங்கப்பட மாட்டாது என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முன்னெடுப்புகள் பணியாளர் குறைப்புகள் குறித்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது, இருப்பினும் ஆப்பிள் நிறுவனம் 5,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கான திட்டத்தை கைவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

செயற்கை நுண்ணறிவுத் துறை வேகமாக வளர்ந்து வரும் சூழலில், ஆட்குறைப்பு நடவடிக்கையை ஆப்பிள் எதிர்கொண்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தில் 25 ஆண்டுகள் பணியாற்றி, தற்போது தலைமை செயல் அதிகாரியாக பதவி உயர்வு பெற்றுள்ள டெர்னஸ், பொறியியல் துறையில் அதிக கவனம் செலுத்துவதோடு,

புதிய வருவாய் வாய்ப்புகளையும், தற்போதுள்ள தயாரிப்புகளிலிருந்து அதிக வருமானம் ஈட்டுவதற்கான வழிகளையும் தேடி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com