அடுத்த ஆட்குறைப்பு.. 10,000 ஊழியர்கள் வேலைக்கு ஆப்பு வைக்கும் பிரபல சாப்ட்வேர் நிறுவனம்

சில ஆண்டுகளில் பணிநீக்கம் செய்த ஊழியர்களின் எண்ணிக்கை லட்சங்களை தாண்டும்.
SAP Layoffs
SAP Layoffs
Published on: 
Summary

ஜெர்மனியின் முன்னணி மென்பொருள் நிறுவனமான SAP, 10,000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய திட்டமிட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவால் உலகம் முழுவதும் மனிதர்களின் வேலை பறிக்கப்பட்டு வருகிறது. பெரு நிறுவனங்கள் முதல் சிறு நிறுவனங்கள் வரை பணத்தை மிச்சப்படுத்த மனிதர்களை பணிநீக்கம் செய்துவிட்டு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி வருகின்றன.

அமேசான் உள்ளிட்ட உலகின் முன்னணி நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளில் பணிநீக்கம் செய்த ஊழியர்களின் எண்ணிக்கை லட்சங்களை தாண்டும்.

10,000 ஆட்குறைப்பு

இந்நிலையில் ஜெர்மனியின் முன்னணி மென்பொருள் நிறுவனமான SAP மற்றொரு பெரிய ஆட்குறைப்புக்குத் தயாராகி வருகிறது.

உலகளவில் குறைந்தது 10,000 வேலைகளைக் குறைக்கும் திட்டத்தை அந்நிறுவனம் பரிசீலித்து வருவதாக ப்ளூம்பெர்க் அறிக்கை தெரிவிக்கிறது.

உலகளவில் 1.10 லட்சம் ஊழியர்களை கொண்டது SAP நிறுவனம். எனவே மொத்த ஊழியர்களில் இது சுமார் 9 சதவீதத்திற்குச் சமமாகும்.

ஏஐ பயன்பாடு

நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கிறிஸ்டியன் க்ளீன் தலைமையில், இந்நிறுவனம் தனது மென்பொருள் பணிகளில் ஏஐ தொழில்நுட்ப பயன்பாட்டை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

செலவுகளைக் கட்டுப்படுத்திக்கொண்டே, ஏஐ அடிப்படையிலான தயாரிப்புகளுக்கான வளர்ந்து வரும் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் வணிகத்தை மாற்றுவதே இந்த மறுசீரமைப்பின் முக்கிய நோக்கமாகத் தெரிகிறது.

இதன் ஒரு பகுதியாக, தயாரிப்பு, பொறியியல் மற்றும் விற்பனைத் துறைகளில் அதிக கவனம் செலுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

ஏஐ மேம்பாட்டிற்கு நிறுவனத்தின் பட்ஜெட்டை அதிகரிக்க SAP ஏற்கனவே சில கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

கடந்த ஜூலை மாதம், ஏஐ தொடர்பான பதவிகளைத் தவிர மற்ற புதிய ஆட்சேர்ப்புகளை அது நிறுத்தியது.

அதே நேரத்தில், நிறுவனத்தின் உயர் மட்டத்திலும் மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன.

தயாரிப்புத் தலைவர் மற்றும் விற்பனைத் தலைவர் போன்ற முக்கிய நிர்வாகிகளின் விலகல் இந்த மாற்றங்களின் அறிகுறியாகும்.

கடந்த மூன்று ஆண்டுகளில் SAP மேற்கொள்ளும் இரண்டாவது பெரிய மறுசீரமைப்பு இதுவாகும்.

ஜனவரி 2024ல் சுமார் 9,000 முதல் 10,000 வரையிலான வேலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

SAP நிறுவனம், வழக்கமாக இதுபோன்ற முக்கிய அறிவிப்புகளை ஜனவரி மாத இறுதியில் அந்த ஆண்டின் திட்ட முடிவுகளுடன் வெளியிடும்.

எனவே, விரைவில் ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X