பிஜி தீவில் சக்திவாய்ந்த நில நடுக்கம்

ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவு.சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.
பிஜி தீவில் சக்திவாய்ந்த நில நடுக்கம்
Published on

தென் பசிபிக் கடலில் உள்ள பிஜி தீவு அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் சுவா பகுதியில் இன்று காலை ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக நிலநடுக்கம் உண்டானது. சுவாவில் இருந்து 591 கி.மீ. தென்மேற்கு பகுதியில் 10 மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கும் மையம் கொண்டதாக நில அதிர்வுக்கான தேசியமையம் தெரிவித்துள்ளது.

பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. நிலநடுக்கத்தை உணர்ந்ததும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com