

அமெரிக்காவில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள நினைத்த பெற்றோர்கள், ஒரு கட்டத்தில் வாடகை தாயிடம் கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தியதை தொடர்ந்து, குழந்தை பெற்றுக்கொண்ட அவர் குழந்தை தனக்கு தான் சொந்தம் என்று கூறி நீதிமன்றத்தை நாடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த தம்பதிகளான ஓமர் அகமது மற்றும் நெளஷீன் கில்கர் ஆகியோர், செவிலியரான மெக்கென்னா வெஸ்ட் என்ற வாடகை தாயை அணுகி, தங்களது குழந்தையை பெற்றுத் தருமாறு கூறியுள்ளனர்.
அவர்களுக்கு இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தில், சிசுவில் இருக்கும் குழந்தைக்கு ஏதாவது குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டால், அந்த சிசுவை கலைப்பதற்கான ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது.
இதையடுத்து சிசுவின் 20-வது வாரத்தில், அந்த குழந்தைக்கு இதய நோய் இருப்பது கண்டறியப்பட்டது.
இதன்மூலம் குழந்தையின் இதயம் இடது பக்கத்தில் முழுமையாக வளர்ச்சியடையாமல், போதுமான அளவு செயல்பட தவறும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவித்தன.
மேலும் இதய நோய் குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைக்கு, பிறந்த உடனேயே சில அறுவை சிகிச்சைகள் செய்யப்பட வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் குழந்தையின் பெற்றோர்கள், வாடகை தாயிடம் சிசுவை கலைக்க கூறியுள்ளனர். ஆனால் அவரோ, குழந்தையை நானே வைத்துக்கொள்கிறேன் என்று கூறி, டெல்லாஸ் மாகாணத்தில் கருக்கலைப்பு செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், வெளியூருக்கு தப்பி செல்ல முயன்றுள்ளார்.
பின்னர் வாடகை தாய் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார். பிறந்த அந்த குழந்தைக்கு இதய கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து பிறந்த குழந்தையுடன் வாடகைத் தாய் டெக்சாஸ் மாகாணத்திற்கு தப்பிச் செல்ல முயன்றுள்ளார். இதனால், குழந்தையின் பெற்றோர்கள் டெல்லாஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
குழந்தையின் பெற்றோர்கள் நீதிமன்றத்தில், தாங்கள் கருவை கலைக்க கூறவில்லை என்று வாதிட்டனர். மேலும் இந்த நிகழ்வை ஒரு அரசியல் நாடகாக வாடகைத் தாய் மாற்றிவிட்டதாக கூறினர்.
இதைத்தொடர்ந்து டெல்லாஸ் நீதிமன்றம், குழந்தையின் வாடகை தாயை மாகாணத்தை விட்டு வெளியேற தடை விதித்து, குழந்தைக்கு தேவையான அனைத்து உயிர் காக்கும் சிகிச்சையை வழங்குமாறு உத்தரவிட்டார்.
மேலும் பிறந்த குழந்தைக்கு, அதன் உயிரியல் பெற்றொர்களே பொறுப்பானவர்கள் எனக் கூறி, வாடகை தாய்க்கு குழந்தை மீதான அதிகாரத்திற்கு தடை விதித்து தீர்ப்பளித்தனர்.