

அமெரிக்காவில் குளிர்காலம் தொடங்கி பனிக்கட்டிகள் சூழ்ந்துள்ள நிலையில், அந்த பகுதியில் வசித்து வரும் பொதுமக்களுக்கு தேவையான உணவுகளை இளம்பெண் ஒருவர் ஒரு சிறிய ஜெட் விமானம் வழங்கி வருகிறார்.
அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மாகாணத்தில் தனது குடும்பத்தினருடன் எஸ்தர் கெய்ம் என்ற இளம்பெண் வசித்து வந்துள்ளார்.
அலாஸ்கா மாகாணத்தில் அக்டோபர் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை குளிர்காலம் நிலவுகிறது. மேலும் இந்த காலகட்டத்தில் பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வராதபடி, அதிகமான பனிக்கட்டிகள் சூழ்ந்து காணப்படுகிறது.
இதையடுத்து எஸ்தர் சிறுமியாக இருந்த காலகட்டத்தில், அந்த பகுதியை சேர்ந்த நபர் ஒருவர், தன்னால் முடிந்த உணவுகளை ஜெட் விமானம் மூலம் தெருக்களில் வீசி வந்துள்ளார்.
அந்த நபர் செய்த இந்த உதவி, இளம்பெண் எஸ்தரை வெகுவாக பாதித்துள்ளது. இதன்காரணமாக தனது பள்ளி படிப்பை முடித்த இளம்பெண், விமானியாக கல்லூரியில் சேர்ந்தார்.
இதையடுத்து தனது விமான ஓட்டுநர் படிப்பை முடித்த எஸ்தர், சொந்தமாக ஒரு சிறிய ஜெட் விமானத்தை வாங்கினார்.
இதைத்தொடர்ந்து அலாஸ்கா மாகாணத்தில் குளிர்காலங்களில் பாதிக்கப்பட்டு வரும் குடும்பங்களுக்கு வான்கோழி உணவுகளை வழங்க எஸ்தர் முடிவு செய்தார்.
இதற்கிடையில் வட அமெரிக்காவில் வான்கோழி இறைச்சிகளை வாங்கிய எஸ்தர், அதனை ஒரு பையில் வைத்து, அதன் மீது மஞ்சள் நிற டேப்பை ஒட்டினார்.
இதன்மூலமாக வெள்ளை நிற பனிக்கட்டிகளில், பொதுமக்கள் வான்கோழி மாமிசத்தை எளிதில் கண்டுகொள்ளும் வகையில், அதன் மீது மஞ்சள் நிற டேப்பை ஒட்டினார்.
இதைத்தொடர்ந்து தான் வாங்கிய அந்த ஜெட் விமானம் மூலம், கடந்த அக்டோபர் தொடங்கி தற்போது வரை சுமார் 42 வான்கோழி இறைச்சிகளை வழங்கியுள்ளதாக எஸ்தர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த உணவு சேவை குறித்து எஸ்தர் கூறுகையில், “இந்த சேவை, எனது சிறுவயதில் நான் சந்தித்த நபர் மூலமாக தொடங்கப்பட்டது.
அவர் இறந்தபிறகு, அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த உணவு சேவையை நான் வழங்கி வருகிறேன்.
நான் இதனை 2022 முதல் செய்து வருகிறேன், நான் செய்வதை பார்த்த இந்த பகுதி தன்னார்வலர்கள் பலர் என்னுடன் தற்போது இணைந்துள்ளனர்” என கூறினார்.