ஜெட்டாவிற்கு நவ. 24 வரை விமான சேவைகளை ரத்து செய்த ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

பயணிகள், பயண தேதியை இலவசமாக மாற்றவோ, பயணத்தை ரத்து செய்து முழு தொகையை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.
Air India Flight
Published on: 

ஜெட்டாவிற்கு செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவைகள் நவம்பர் 24, 2026 வரை இடைநிறுத்தப்படுவதாக ஏர் இந்தியா அறிவித்தது. அதேபோல், ரியாத் மற்றும் தம்மாம் நகரங்களுக்கான விமான சேவைகளும் நவம்பர் 30, 2026 வரை தொடர்ந்து இடைநிறுத்தப்பட்டிருக்கும்.

'எக்ஸ்' தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பயண ஆலோசனையில், பயணிகள் தங்கள் பயண தேதியை இலவசமாக மாற்றிக்கொள்ளலாம் அல்லது பயணத்தை ரத்து செய்துவிட்டு முழு தொகையையும் திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலவசமாக மாற்றிக்கொள்ளலாம்:

இது குறித்து ஏர் இந்தியா வெளியிட்டுள்ள பதிவில், "அந்த பிராந்தியத்தில் நிலவும் சூழல் காரணமாக, ஜெட்டாவிற்கு செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவைகள் நவம்பர் 24 வரை இடைநிறுத்தப்படுகின்றன. ரியாத் மற்றும் தம்மாம் நகரங்களுக்கான விமான சேவைகள் நவம்பர் 30, 2026 வரை தொடர்ந்து இடைநிறுத்தப்பட்டிருக்கும்.

நவம்பர் 20, 2026 அன்று அல்லது அதற்கு முன்பாக, நவம்பர் 24, 2026 வரை ஜெட்டாவிற்கு பயணம் செய்ய அல்லது அங்கிருந்து வர உறுதிப்படுத்தப்பட்ட முன்பதிவு செய்துள்ள பயணிகள், பயண தேதியை இலவசமாக மாற்றிக்கொள்ளலாம் அல்லது பயணத்தை ரத்து செய்துவிட்டு முழு தொகையையும் திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.

இதே வசதி, நவம்பர் 10, 2026 அன்று அல்லது அதற்கு முன்பாக, நவம்பர் 30, 2026 வரை ரியாத் மற்றும் தம்மாம் நகரங்களுக்குப் பயணம் செய்ய அல்லது அங்கிருந்து வர உறுதிப்படுத்தப்பட்ட முன்பதிவு செய்துள்ள பயணிகளுக்கும் பொருந்தும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

காலக்கெடு:

மேலும் அந்த ஆலோசனையில், "ஏர் இந்தியா பயணிகள் சவுதி அரேபியாவில் விமான சேவைகள் இயங்கும் எந்தவொரு நிலையத்திற்கும் தங்கள் பயணத்தை மாற்றிக்கொள்ளலாம். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் சவுதி அரேபியா அல்லது பஹ்ரைனில் விமான சேவைகள் இயங்கும் எந்தவொரு நிலையத்திற்கும் தங்கள் பயணத்தை மாற்றிக்கொள்ளலாம்.

ரியாத் மற்றும் தம்மாம் நகரங்களுக்கான முன்பதிவுகளை கொண்ட பயணிகள், மாற்றியமைக்கப்பட்ட பயணத்தை டிசம்பர் 14, 2026-க்குள் மேற்கொள்ளலாம். ஜெட்டா நகரத்திற்கான முன்பதிவுகளை கொண்ட பயணிகள், மாற்றியமைக்கப்பட்ட பயணத்தை டிசம்பர் 08, 2026-க்குள் மேற்கொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X