3வது தகாத உறவு.. நீளும் லிஸ்ட் - ஜென்சனுக்கு பறந்த போன் கால் - மறுப்பக்கம் டிரம்ப் - என்ன சொன்னார்?

ஒரு ஜாம்பவானுக்கு பதிலாக மற்றொரு ஜாம்பவானை நியமிக்க வேண்டும்.
ஜென்சன், டிரம்ப்
Published on: 
Summary

ஜென்சன் ஹுவாங் ஏற்கனவே 2 பெண்களுடன் தகாத உறவில் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் 3வதாக ஒரு பெண்ணுடனும் அவர் தகாத உறவில் இருந்ததாக செய்தி வெளியாகி உள்ளது.

என்விடியாவின் தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங் (63), சீன பெண்ணுடன் தகாத உறவில் இருந்தது வெளிச்சத்துக்கு வந்த நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தனது உறவை பகிரங்கமாக ஒப்புக்கொண்ட அவர், அதற்காக தன் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இதனிடையே ஜென்சன் உறவில் இருந்த ஆலிஸ் ஹூவாங் என்ற அந்த பெண் சீனாவால் அனுப்பப்பட்ட உளவாளி என அமெரிக்க புலனாய்வு முகமைகள் சந்தேகிக்கின்றன.

அவர் என்விடியாவின் சிப் ஏற்றுமதியில் ஆதிக்கம் செலுத்தி சீனாவுக்கு சாதகமாக செயல்பட முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் என்விடியா நிறுவனம் அதை மறுத்துள்ளது.

2வது உறவு

இதனிடையே ஜென்சன் உடைய 2வது தகாத உறவு குறித்த தகவலும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. என்விடியா நிறுவனத்தின் ஹெல்த்கேர் பிரிவின் இணை தலைவர் மிட்ச்செல் பௌவல் உடன் ஜென்சன் உறவில் இருந்ததாக நியூ யார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. மிட்ச்செல் ஏற்கனவே திருமணம் ஆனவர் ஆவார்.

கடந்த ஆண்டு கலிபோர்னியாவில் நிறுவனத்தின் நிகழ்ச்சிக்கு இடையில் ஓட்டல் அறையில் இருவரும் நேரம் செலவிட்டதாகவும் அதை படம்பிடித்தவர் பணம் கொடிது அமைதி ஆக்கப்பட்டதாகவும் என்விடியா நிறுவன முன்னாள் ஊழியர்கள் இருவரை மேற்கோள் காட்டி நியூ யார்க் டைம்ஸ் இச்செய்தியை வெளியிட்டது.

3வது உறவு

இந்நிலையில் நிலைமையை மேலும் சிக்கலாக்கும் விதமாக ஜென்சன், என்விடியா நிறுவனத்தின் மற்றொரு பெண் ஊழியருடன் திருமணத்துக்கு புறம்பான உறவில் இருந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பெயர் குறிப்பிடப்படாத வட்டாரங்களை மேற்கோள் காட்டி, ஹுவாங் மற்றொரு என்விடியா ஊழியருடன் "நெருங்கிய உறவில்" இருந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி கூறுகிறது.

ராய்ட்டர்ஸ் அந்த ஊழியரின் பெயரை வெளியிடவில்லை. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து என்விடியா கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டது.

ராஜினாமா

தொடர் சர்ச்சைகளை தொடர்ந்து ஜென்சன் தன் பதவியை ராஜினாமா செய்த நிலையில் அதை என்விடியா நிறுவனம் ஏற்றுக்கொண்டது. 1992 இல் அவர் அந்நிறுவனத்தை வழிநடத்தியவர் ஆவார். என்விடியாவின் இணை நிறுவனரும் ஆவார்.

தற்போது தலைமை நிதி அதிகாரி கோலெட் கிரெஸ் நிறுவனத்தின் இடைக்கால சிஇஓவாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2013 இல் என்விடியாவில் இணைந்தார். ஜென்சன் சர்ச்சையால் நிறுவனத்தின் பங்குகள் கடுமையான சரிவை சந்தித்து வருகின்றன. எனவே அவற்றை சீர் செய்து நிறுவனத்தின் பெயரை மீட்டெடுக்கும் பொறுப்பு அவர் வசம் சென்றுள்ளது.

டிரம்ப் தலையீடு

மறுபுறம் ஜென்சன் உடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் பேசியுள்ளார்.

இந்த போன் கால் குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய டிரம்ப், இந்த விவகாரத்தால் தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்தே ஜென்சன் மிகவும் வருத்தப்படுவதாகவும், தொலைபேசியில் தன்னிடம் அதைப் பற்றியே அதிகம் பேசினார் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஜென்சன் "நரக வேதனையை அனுபவித்து வருகிறார்" (going through hell) என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

"அந்தப் பெண் (ஆலிஸ் ஹுவாங்) ஒரு சீன உளவாளி என்பது உங்களுக்குத் தெரியுமா?" என்று தான் ஜென்சனிடம் நேரடியாகக் கேட்டதாகவும், அதற்கு அவர் "எனக்குத் துளியும் தெரியாது" எனப் பதிலளித்ததாகவும் டிரம்ப் கூறினார்.

ஜென்சன் ஒரு "கண்ணியமான மனிதர்"என்றும், அவரின் வார்த்தைகளை தான் நம்புவதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார். அவரது பணியை விட்டுவிட வேண்டாம் எனவும் அவரது பணியை தக்க வைத்துக்கொள்ள எதிர்த்து சண்டையிடுமாறும் தான் அறிவுரை வழங்கியதாக டிரம்ப் மேலும் தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து FBI விசாரணை நடத்தி வருவதையும் அவர் உறுதிப்படுத்தினார்.

ஜாம்பவான்

அதே நேரம் தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் டிரம்ப் வெளியிட்ட பதிவில், ஒரு ஜாம்பவானுக்கு பதிலாக மற்றொரு ஜாம்பவானை நியமிக்க வேண்டும். டிம் குக் இதற்கு சரியாக இருப்பார்" என என்விடியாவுக்கு யோசனை வழங்கியுள்ளார்.

ஆப்பிள் நிறுவன சிஇஓவாக கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்ட டிம் குக், கடந்த செப்டம்பர் மாதம் அப்பதவியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

X