நிலச்சரிவால் தங்க சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து - 7 பேர்பலி

சுரங்க வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர். விபத்தில் படுகாயமடைந்த 3 பேரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நிலச்சரிவால் தங்க சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து - 7 பேர்பலி
Published on

மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவின் கிழக்கே அமைந்துள்ள சின்குவா பகுதியில் உள்ள தங்கசுரங்கத்தில் தொழிலாளர்கள் சிலர் தங்கம் வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக அந்த பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் தங்கசுரங்கம் இடிந்து விழுந்தது. இதில் அங்கு சுரங்க வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர், மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் சுரங்க தொழிலாளர்கள் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் படுகாயமடைந்த 3 பேரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com