VIDEO: 5 மணி நேரம் தொடர்ச்சியாக Planking செய்து உலக சாதனை படைத்த 61 வயது மூதாட்டி

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அவர் தனது சொந்த சாதனையை முறியடித்துள்ளார்.
5 மணி நேரம் Planking
Published on: 
Summary

61 வயதான மூதாட்டி 5 மணி நேரம் பிளாங்கிங் செய்து உலக சாதனை படைத்தார்

கனடாவை சேர்ந்த 61 வயதான மூதாட்டி ஐந்து மணி நேரம் தொடர்ச்சியாக பிளாங்கிங் செய்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

61 வயதான டோனஜீன் வைல்ட், கடந்த வாரம் ஹன்ட்ஸ்மேன் உலக மூத்தோர் விளையாட்டுப் போட்டிகளின் ஒரு பகுதியாக நடைபெற்ற நிகழ்வில் இந்த சாதனையை படைத்தார்.

சாதனை

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அவர் தனது சொந்த சாதனையை முறியடித்துள்ளார்.

இந்த ஆண்டு மார்ச் மாதம் ஆல்பர்ட்டாவில், 4 மணி நேரம், 30 நிமிடங்கள் மற்றும் 11 வினாடிகள் பிளாங்கிங் நிலையில் இருந்து அவர் சாதனை படைத்திருந்தார்.

இப்போது, ​​அவர் அந்த சாதனையை முறியடித்து ஐந்து மணி நேரத்தை எட்டியுள்ளார். இதன் காணொளி தற்போது வைரலாகி வருகிறது.

டோனஜீன் வைல்ட்

டோனஜீன் வைல்ட் ஒரு ஓய்வுபெற்ற முன்னாள் ஆசிரியை. அவருக்கு ஐந்து பிள்ளைகளும் பேரக்குழந்தைகளும் உள்ளனர். அவர் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பிளாங்கிங் பயிற்சி செய்து வருகிறார்.

தனது உடல் வலிமைக்குப் பின்னால் கடின உழைப்பு இருப்பதாகவும், பிளாங்கிங் தவிர, புஷ்-அப்ஸ், பளுதூக்குதல் மற்றும் ஓட்டம் ஆகியவை தனது தினசரி பயிற்சியின் ஒரு பகுதி என்றும் அவர் கூறினார்.

இந்த சாதனை முயற்சி குறித்து அவர் பல மாதங்களுக்கு முன்பே ஏற்பாட்டாளர்களுக்குத் தெரிவித்திருந்தார். இந்த சாதனை முயற்சி, அந்த நிகழ்வின் தொடக்க விழாவின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ச்சியான பயிற்சியும் உறுதியும் இருந்தால், வயது வித்தியாசமின்றி எதையும் சாதிக்க முடியும் என்பதை டோனகீன் நிரூபித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com