மான்கள் கூட்டத்தை வேட்டையாடும் சிங்கங்கள்

வன ஆர்வலரான சிமியோன் என்பவர் இந்த வீடியோவை எடுத்துள்ளார். கரீபா ஏரி பகுதியில் ஒரு நிகழ்ச்சிக்காக சென்ற போது இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது.
மான்கள் கூட்டத்தை வேட்டையாடும் சிங்கங்கள்
Published on

சமூக வலைத்தளங்களில் விலங்குகள் தொடர்பாக ஏராளமான வீடியோக்கள் பகிரப்பட்டாலும் சில வீடியோக்கள் பயனர்களை கவர்ந்து வைரலாகி விடும். அந்த வகையில் தற்போது யூடியூப்பில் வெளியாகி உள்ள சிங்க வேட்டையின் வீடியோ வைரலாகி வருகிறது.

அதில், ஜிம்பாப்வேயில் மட்டுசடோனா பகுதியில் தேசிய பூங்காவில் சிங்கக்கூட்டம், கொம்புகள் கொண்ட ஆப்பிரிக்க மான் வகைகளை வேட்டையாடுவதற்காக துரத்தும் காட்சிகள் உள்ளது. வன ஆர்வலரான சிமியோன் என்பவர் இந்த வீடியோவை எடுத்துள்ளார். அவர் கரீபா ஏரி பகுதியில் ஒரு நிகழ்ச்சிக்காக சென்ற போது இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது.

இதுகுறித்து அவர் கூறுகையில், எங்கள் படகு சவாரியின் போது எருமைகள் மற்றும் யானைக்கூட்டங்களை கண்டு பிரமித்தோம். சிறிது தொலைவில் சிங்கங்கள் கூட்டமாக இம்பாலாக்களை வேட்டையாடும் காட்சிகளை பார்த்ததும் அவற்றை வீடியோ எடுத்தோம் என்றார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com