

வெனிசுலா நாட்டின் எல்லைக்குள் உள்ள கொலம்பிய கிளர்ச்சியாளர் முகாம் மீது வெனிசுலா ராணுவம் நடத்திய தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டனர்.
வெனிசுலாவின் மேற்கு அபுரே மாநிலத்தின் தென்மேற்கே உள்ள வனப்பகுதியில் கொலம்பிய கிளர்ச்சிக் குழுவான தேசிய விடுதலை ராணுவத்திற்கு (ELN) சொந்தமான முகாம் அமைந்திருந்தது.
அம்முகாமை டிரோன்கள் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர்கள் கடந்த அக்டோபர் 30 அன்று வெனிசுலா ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க உளவு அமைப்புகளின் ஆதரவுடன் இத்தாக்குதலை வெனிசுலா ராணுவம் மேற்கொண்டது. இந்த தாக்குதலே அமெரிக்காவின் உத்தரவு என்று வெனிசுலா ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
வெனிசுலாவும் கொலம்பியாவும் 2,200 கிலோமீட்டர் எல்லையை பகிர்ந்துகொள்கிறது. இந்த எல்லை பகுதிகளில் ELN கிளர்ச்சிக் குழு உட்பட பல ஆயுதக் குழுக்கள் போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத சுரங்கத் தொழில் மற்றும் ஆள் கடத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
வெனிசுலாவை ஆண்டு வந்த இடதுசாரி அதிபர் நிகோலஸ் மதுரோவையும் அவரது மனைவி சிலியா புளோரசையும் அமெரிக்க ராணுவம் அதிபர் மாளிகைக்குள் புகுந்து அதிரடியாக கடத்திக்கொண்டு போனது. அவர்கள் தற்போது அமெரிக்காவில் போதைப்பொருள் பயங்கரவாத குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
மறுபுறம் வெனிசுலாவில் துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் அதிபராக நியமனமானார். அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக அவர் அறிவித்தார். இதன்மூலம் வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை கட்டுப்படுத்தும் அதிகாரம் மறைமுகமாக அமெரிக்கா வசம் சென்றது.
எண்ணெய் வளத்தை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்காத காரணத்தாலேயே இடதுசாரியான மதுரோ அமெரிக்காவால் கடத்தப்பட்டதாக விமர்சனமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு போதைப்பொருளை அமெரிக்காவுக்கு கடத்தி வருவதாக கூறி பசிபிக் கடலில் வெனிசுலா படகுகள் சிலவற்றை அமெரிக்க ராணுவம் தாக்கி அழித்தது.
ஆனால் அவை போதைப்பொருள் படகுகள் தானா அல்லது அகதிகள் அல்லது மீனவர்கள் சென்ற படகுகளா என்பது இதுநாள்வரை உறுதிப்படுத்தப்படவில்லை.