12வது குழந்தை ரகசியம் இல்லை.. வெளிய சொல்லல அவ்ளோதான் - எலான் மஸ்க் தடாலடி

இந்த வருடத்தின் தொடக்கத்தில் தனது 12 வது குழந்தைக்கு தந்தையாகியுள்ளார்ரகசியமாக வைத்தததாக கூறுவது சரியில்லை என்று தெரிவித்துள்ளார்.
12வது குழந்தை ரகசியம் இல்லை.. வெளிய சொல்லல அவ்ளோதான் - எலான் மஸ்க் தடாலடி
Published on

உலக பணக்காரரும் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா ஆகியவற்றின் நிறுவனருமான எலாம் மஸ்க் இந்த வருடத்தின் தொடக்கத்தில் தனது 12 வது குழந்தைக்கு தந்தையாகியுள்ளார் என்றும் அதை அவர் ரகசியமாக வைத்துள்ளார் என்றும் என்று சமீபத்தில் வெளியான ப்ளூம்பெர்க் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

காதல் விவகாரங்களில் பலருடன் தொடர்பு வைத்துள்ள எலான் மஸ்க்கிற்கு கடந்த 5 வருடங்களில் மட்டும் 6 குழந்தைகள் பிறந்துள்ளனர். தற்போது பிறந்துள்ள 12 வது குழந்தை மஸ்க் உருவாக்கிய நிறுவனமான நியூரோடெக்னாலஜி துறையில் இயங்கிவரும் நியூராலின்க் நிறுவனத்தின் மேனேஜர்களில் ஒருவரான ஷிவோன் சிலிஸ் பெற்றேடுத்துள்ளார்.

எலான் மஸ்க் - சிவோன் சிலிஸ் ஜோடிக்கு இது 3 வது குழந்தையாகும். கடந்த 2021 ஆம் ஆண்டு எலான் - சிலிஸ் இணையருக்கு ஸ்டிரைடர் - ஆஸுரே என்ற இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. இதுதவிர பிரபல கனேடிய பாடகி கிரிம்ஸ், எலான் மஸ்க்கின் 3 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

தற்போது ஷிவோன் சிலிஸுக்கு பிறந்துள்ள எலான் மஸ்க்கின் 12 வது குழந்தை இந்த வருட ஆரம்பத்தில் பிறந்துள்ளது என்றும் குழந்தையின் பிறப்பு, பாலினம் மற்றும் பெயர் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்ட புளூம்பெர்கின் அறிக்கைக்கு எலான் மஸ்க் ரியாக்ட் செய்துள்ளார்.

அதாவது தனக்கு 12 வது குழந்தை பிறந்தது உண்மைதான் என உறுதிப்படுத்தியுள்ள எலான் மஸ்க் அதை ரகசியமாக வைத்தததாக கூறுவது சரியில்லை என்று தெரிவித்துள்ளார். குழந்தை பிறந்தது குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தெரியும். ஊடகத்திடம் அதை வெளிச்சம்போட்டு சொல்வில்லையே தவிர இதில் ரகசியம் என்று எதுவும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

எலான் மஸ்க் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பொதுவெளியில் அதிகம் பகிராதவராகவே இருந்து வருகிறார். சமீபத்தில் தனது நிறுவனத்துக்கு இண்டர்ன்ஷிப் வந்த பெண்ணுக்கு பாலியல் துப்புறுதல் அளித்ததாக எலான் மஸ்க் மீது குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com