

புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்க உள்ளார். இதற்கான விழா இன்று இரவு 7 மணிக்கு டெல்லியில் நடைபெறவுள்ளது.
பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு பல்வேறு நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், டெல்லி ராஷ்ட்ரபதி பவனில் நடைபெற உள்ள பிரதமர் மோடி பதவியேபு விழாவில் கலந்து கொள்ள இலங்கை, பூடான், மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தலைவர்கள் வருகை தந்துள்ளனர்.
இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன, மியான்மர் அதிபர் யூ வின் மிண்ட், பூடான் பிரதமர் லோடே ஷெரிங் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் வருகை தந்துள்ளனர்.