திங்களூர் அருகே பனை மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

திங்களூர் அருகே பனை மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலியானார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திங்களூர் அருகே பனை மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி
Published on

ஈரோடு:

திங்களூரை அடுத்த மாச்சாபாளையம், தச்சந்தோட்டம், வேப்பங்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது53). பனை மரம் ஏறும் தொழிலாளி.

சம்பவத்தன்று சின்ன வீரசங்கிலியில் உள்ள ஒரு தோட்டத்தில் ராஜேந்திரன் பனைமரம் ஏறினார். அப்போது எதிர்பாராத வகையில் பனைமரத்தில் இருந்து அவர் தவறி கீழே விழுந்து விட்டார்.

இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய ராஜேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து திங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com