வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி செய்தவர் கைது

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி செய்தவர் கைது
Published on

கோவை:

சேலம் தாதகாபட்டி அருகே உளள பொம்மன்ன செட்டி காட்டை சேர்ந்தவர் ஜானகி ராமன் (வயது 26). இவருக்கு அன்னதானப்பட்டியை சேர்ந்த விஷ்ணு பிரியா மூலம் கோவை சரவணம்பட்டியை சேர்ந்த மார்கோசிஸ் நவமணி என்பவர் அறிமுகமாகி உள்ளார். இவர் ஜானகிராமனுக்கு ஹாங்காங்கில் வேலை வாங்கி தருவதாக கூறி தவணை முறையில் ரூ. 1 லட்சத்து 90 ஆயிரம் மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றை வாங்கி உள்ளார்.

ஆனால் வேலை வாங்கி கொடுக்காமலும், வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். மேலும் இவர் இது போன்று மேலும் 5 பேரிடம் ரூ. 4 லட்சத்து 90 ஆயிரம் பணம் மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றை பெற்றுக்கொண்டு மோசடி செய்தது தெரிய வந்தது.

பின்னர் இது குறித்து ஜானகி ராமன் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த மார்கோசிஸ் நவமணியை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com