குடியரசு தின விழா: காண்போரை மெய்சிலிர்க்க வைத்த சாகச அணிவகுப்புகள்

குடியரசு தின விழா: காண்போரை மெய்சிலிர்க்க வைத்த சாகச அணிவகுப்புகள்

குடியரசு தினத்தை ஒட்டி டெல்லி ராஜ்பாத்தில் பல்வேறு பாதுகாப்பு படைப்பிரிவுகளை சேர்ந்த வீரர், வீராங்கணைகள் மெய்சிலிர்க்கும் வண்ணம் சாகச அணிவகுப்புகளை நடத்தினர். #RepublicDay
Published on

நாட்டின் 69-வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. தலைநகர் டெல்லியில் வழக்கமாக, ஏதேனும் ஒரு நாட்டின் தலைவர் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பார். ஆனால், இம்முறை 10 ஆசியான் நாடுகளின் தலைவர்கள், இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

ராஜ்பாத்தில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடைக்கு தலைவர்களை ஜனாதிபதி மற்றும் பிரதமர் மோடி வரவேற்றனர். தேசிய கொடியை ஜனாதிபதி ஏற்றியதை அடுத்து, முப்படை வீரர்கள் மற்றும் சிறப்புப்படை வீரர்களின் அணிவகுப்பு தொடங்கியது. ராணுவ டாங்கிகள், பிரமோஸ் ஏவுகணை, விமானப்படை மற்றும் கடற்படையில் உள்ள நவீன தளவாடங்கள் அணிவகுத்தன.

நாட்டின் பெருமையை பறைசாற்றும் வகையிலும், பல்வேறு மாநிலங்களின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையிலும் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் இடம் பெற்றன.

இதனை அடுத்து, பல்வேறு பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த வீரர், வீராங்கணைகள் மோட்டார் சைக்கிளில் சாகச அணிவகுப்புகளை நடத்தினர். பின்னர், விமானப்படை விமானங்கள் வானத்தில் சாகசங்களில் ஈடுபட்டன.

X

Maalai Malar
www.maalaimalar.com