தேவாரம் அருகே பெண்ணை அடித்து கொன்ற மகன் உள்பட 3 பேர் கைது

தேனி மாவட்டம் தேவாரம் அருகே பெண்ணை அடித்து கொன்ற மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கொலை
கொலை
Published on

மேலசொக்கநாததபுரம்:

தேனி மாவட்டம் தேவாரம் டி.கே.வி.பள்ளி தெருவை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது43). இவருக்கும் காளியம்மாள் (40) என்பவருக்கும் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

குடும்பத்தோடு கேரளாவில் வேலை பார்த்து வந்தனர். காளியம்மாள் நடத்தையில் சந்தேகப்பட்டு செல்வக்குமார் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.

சம்பவத்தன்று வேறு ஒரு வாலிபருடன் காளியம்மாள் சென்றுகொண்டிருந்ததை பார்த்த செல்வக்குமார் அவருடன் தகராறு செய்தார். மேலும் அவரது மகன் சிலம்பரசன் (18), உறவினர் விஜய் (23) ஆகியோரும் தகராறு செய்தனர்.

பின்னர் உருட்டு கட்டையால் காளியம்மாளை சரமாரியாக தாக்கினர். காயம் அடைந்த அவர் உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தேவாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வக்குமாரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த மகன் சிலம்பரசன் மற்றும் விஜய் ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com